19/12/2017

இரண்டாண்டுகளுக்கு முன் வரை இவரை குஜராத்தில் யாருக்கும் தெரியாது...


ஊனா என்ற கிராமத்தில் தலித் குடும்பம் ஒன்றின் மீது பசுக் குண்டர்கள் நடத்திய தாக்குதலையடுத்து தலித் பாதுகாப்புக்காக குரல் கொடுக்கத் தொடங்கினார்.

இவர் ஊனா வரை நடத்திய ஊர்வலம் ஒன்றின் போது மூன்று லட்சம் பேர் திரண்டனர்.

மோடி குஜராத் வருவதற்கு முதல் நாளே இவரை சிறையில் அடைத்து மோடி புறப்பட்ட பின்னரே வெளியில் விடுவார்கள். இதுபோல பத்து முறை சிறையில் தள்ளப்பட்டவர்.

ராகுல் காந்தி நேரில் வந்து ஆதரவு தெரிவித்த போதுகூட கட்சியில் இணையவோ, காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்றோ பரப்புரை செய்ய மாட்டேன் என்று சொல்லியவர்.

பாஜகவுக்கு எதிரான பரப்புரையை மட்டுமே முன்வைத்து சுயேச்சை உள்பட பாஜக அல்லாத யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கவே கோரியவர்.

இவர் சுயேச்சையாக போட்டியிட்ட வட்கம் தொகுதியில் காங்., வேட்பாளரை நிறுத்தவில்லை. அப்படி நிறுத்தி இருந்தாலும் அத்தொகுதியில் கணிசமாக வாக்குகளை பிரித்திருப்பார் ஜிக்னேஷ்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.