07/12/2017

தீர்க்க தரிசனம் : கிருஸ்த்துவம் கண்ட துருப்புச்சீட்டா இந்த தானியேல் தீர்க்கதரிசி...

இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...


ஆதியாகமம் முதல் தொடங்கி பவுல் பின் திருவெளிப்பாடு யோவான் வரை அநேக தீர்க்கதரிசிகளின் இறையாளர்களின் ஒட்டு மொத்த தீர்க்கதரிசனமாக உருவெடுத்து நிற்பது இந்த கிருஸ்த்துவ பைபிள்.

இதில் அநேகர் இறுதி கட்ட இறையரசின் காட்சிகளை இதமாய் பதமாய் இறக்கி வைத்தாலும் எப்போது நடக்கும் என்று எவரும் குறிப்பிடாத நிலையில் ஒரு காலக்கணக்கை கொண்டு கச்சிதமாய் காட்டி நின்றவன் இந்த தானியேல் ஒருவனே.

எனவே நாளை குறிப்பிட்டுக்காட்ட ஆண்டை அடையாளபடுத்தி நிற்க கிருஸ்த்துவ மார்க்கத்திற்கே கிடைத்த ஒரே துருப்புச் சீட்டு தீர்க்கதரசி தானியேல் ஒருவனே.

அதனால் கால ஆராய்ச்சியில் களம் கண்டு, நின்றவர்கள் ஆராய்ச்சியாளர்கள் அத்தனை பேர்களையும் ஆட்கொண்டு நின்றது இந்த தானியேல் தீர்க்கதரிசனம்.

இப்படி கால ஆராய்ச்சிக்காக களம் கண்டு நின்றவர்களில்  வொய்ட் அம்மையார் முதற்கொண்டு எல்லோரும் தானியேலை விட்டு வைக்கவில்லை.

ஆனால் இந்த தானியேலை அவன் கண்ட கால அளவை கண்டுணர்ந்து இதுவரை யாராவது வெற்றி பெற்றிருக்கார்களா? என்றால் ஒருவர் கூட இல்லை என்பது தான் உண்மையிலும் உண்மை.

இந்த தடுமாற்றம் ஏன்? இந்த ஏமாற்றம் ஏன்? என எண்ணி பார்ப்பதில்லை எவரும் இப்படி தடுமாற்றம், ஏமாற்றம் கண்டபோது கூட ஆராயும் நோக்கில் மாற்றம் கொண்டு வர எவர் மனதும் வரவில்லை. தீர்க்கதரிசியின் திவ்ய வார்த்தைகள் ஒருபோதும் பொய்யாகாது. புரிந்து கொண்ட விதம் அவர்கள் புலப்படுத்தியவிதம் தவறாகயிருப்பின் தீர்க்கதரிசனத்தை குறைக்கூறி என்ன பயன்.

தீர்க்கதரிசனங்களை தீர்க்கதரிசிகள் தன் ஆன்மபலத்தால் இறைவனின் திட்டப்படி ஆன்மாவோடு சம்பந்தபட்ட குருமனிதரால் (ஜுப்ரியல்) அளிக்கபட்டு  இறக்கி வைக்கப்பட்டவை.

இப்படியிருக்க தானியேல் அவர்களின் கருத்துகள் மிகத் தெள்ளத்தெளிவாக இறுதிகட்ட காட்சியை இறக்கி வைக்கும் போது தானியேல்12:9. இப்புத்தகத்தை மூடிவை ஏனென்றால் அதற்கு நீண்ட காலம் (குறிப்பிட்டகாலம் வரை) இருக்கிறது நீ இறந்து மீண்டும் எழுந்து வந்து உனக்குரிய பங்கை வெகுமதியாய் பெற்றுக் கொள்வாய். இறுதி கால திருச்சபை திரித்துவம் கொண்டது என்பதை தெளிவாக்கிய தானியேல் தீர்க்கதரசி கால அளவை சொல்லும் இடங்களில்  எல்லாம் இறையரசு எழுகின்ற காலத்தை பற்றி  சுட்டிகாட்டுகின்ற போது குறிப்பிடபடும் கால அளவுகள் 1260இரவு பகல் 1290 இரவு பகல் 1335இரவு பகல் 2300இரவு பகல் செல்லும். 

ஒரு சாதரண மானுடனக்கே 2300 இரவு பகல் செல்லும் என்றால் வெரும் 2300 நாட்களை குறித்தவை என தெளிவாய் எண்ணும் போது இரண்டாம் வருகை இயேசுவாகிய மிக்கேல் எழும் காலம் 2300என்ற கால அளவை வருடமாக்கி நின்ற ஆராய்ச்சியாளர்களின் அறியாமையை எங்கு கொண்டு சொல்வது.

இதே தானியேல் முதல் வருகையையும் இரண்டாம்  வருகையையும் இணைத்து 70 வது வாரம் என்று எழுதியபோது இதற்கும் மார்க்க அறிஞர்கள் ஆண்டுகளாக்கி கணக்கிட்டு நின்று தோல்வி கண்டதையும்  எண்ணிபார்க்க வேண்டியிருக்கிறது.

இவர்கள் தீர்க்கதரசி தானியேலுக்கு 1நாள் 1வாரம் 1வருடம் என்பதற்கான கால அளவு தெரியாதது போல நாட்களில் சொல்லும் இரகசியத்தை வருடங்களுக்கு கொண்டு சென்று பார்த்ததின் பேதமை நன்கு தெரிகிறது.

தானியேலுக்கு வருடம் என்ற வார்த்தை தெரியாததுமல்ல புரியாததுமல்ல இவர்கள் கற்றுக்கொடுக்க. இந்த தீர்க்கதரசி தானியேல் தீர்க்கதரிசனம் உரைக்கின்ற ஒவ்வொரு இடத்திலும் நெபுகத்நேசர் மன்னனின் இரண்டாம் ஆண்டு, தரியு அரசு ஏற்றுக்கொண்ட ஆண்டு, பெல்சாட்சரின் முதலாண்டு ஆகிய இடங்களில் குறிப்பிடும் போது ஆண்டு என்று குறிப்பிட்டு நிற்கும் தானியேலுக்கா தெரியாது?

இப்படி ஆண்டு என்ற வார்த்தையை நன்றாக ஆண்டு நின்ற தானியேலின் தீர்க்கதரிசனத்திற்கு விளக்கம் கொடுப்பவர்கள் ஆண்டு என்ற வார்த்தை தானியேல் காலத்தில் மாண்டு போனதாய் மனதில் கொண்டு அதி புத்திசாலிகளாய் தங்களை காட்டியுள்ளார்கள்.

மிக்கேல் எழுகின்ற நேரம் இறை மக்களின் தலைவனாய் அண்ட சராசரத்தை ஆட்டிபடைக்கும் அற்புதனாய் இறந்தோரை உயிர்பிக்கும் ஆற்றல் உள்ளவனாய் சித்தரிக்கும் வல்லமையில் தானியேல் அவர்தான் இயேசு என்று கூறவில்லை.

இந்த தானியேல்   எழுபது வாரம் என்ற விஷயத்தில் 62வாரம் முதல் வருகைக்கும் 7வாரம் இரண்டாம் வாருகைக்கும் ஒதுக்குகிறார் இந்த இரண்டாம் வருகைக்குரிய 7வது வாரமாகிய கடைசி வாரத்தின் மத்தியில் அதாவது மூன்றரை நாட்களுக்கு பிறகு என சொல்லியிருக்கிறார்.

இக்கருத்தையே யோவானும் தன் தீர்க்கதரிசனத்தில் (திவெ11) அதிகாரத்தில் ஆலையம் கட்டி 42மாதங்களுக்கு பிறகு சாட்சிகள் கொல்லப்படுவதும்    அதன்பின் ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து மூன்றரை நாட்களுக்கு பிறகு  எழுப்பப்படுவதும் என சொல்லப்பட்ட கருத்தில் ஒற்றுமை இருப்பதை பாருங்கள்.

இக்கருத்தையே தமிழ் தீர்க்க தரிசி முத்துக்குட்டியும் முன்மொழிந்து நிற்பதை பாருங்கள்.

இப்படி இறுதி நாட்களில் இடம் பெறும் மூன்றரை நாள் என்பது முக்கியத்துவம் கொண்ட நாளாகயிருக்கிறது.

இந்நாளை பிரான்சு நாட்டு தீர்க்கதரிசி  நாஸ்ட்ராடாமஸ் தன்னுடைய நூலில் இரண்டாம் அத்தியாயத்தில் 13வது பாடல் எழுப்பப்படும் நாளை பற்றியும் இறைவனின் அருளை பெற்றவருடைய 1000 வருட அரசாட்சி என்று சொல்லும் முடிவற்ற பேற்றினை பெற்ற அரசாட்சி செல்லும் என்று குறிப்பிட்டதை காண்க.

இதே தீர்க்கதரிசி (அத்தியாயம் -10ல்  72-76 ) பாடல்களில் இறையரசு தோன்றும் விதத்தையும்  அது ஆட்சி செய்யும் செனட்டையும் பற்றி கூறிச்செல்வதையும் பாருங்கள்.

இந்தப்பாடல்களில் எல்லோரையும் நடுங்கவைக்கும் வான்மனிதர் வந்திறங்கி பூமியிலிருக்கும் மாபெரும் குருமனிதருடன் இணைந்து ஆட்சி செய்யபோகும் அற்புதத்தையும் அப்போது இறந்தோர் உயிர் பெற்று எழுவதையும், மடிந்து மண்புழுதியில் உறங்குவோர் மீண்டும் எழும் காட்சிகளையும் அவர் சுட்டி காட்ட தவறவில்லை. தானியேல் கூற்றை தரமானதாக ஆக்கி காட்டுகிறார் மீண்டும்.

பழைய ஒய்வுநாள் (இன்று வழக்கத்தில் உள்ள ஒய்வுநாள்) மாறி புதிய ஒய்வுநாள் வியாழக்கிழமை என குறிப்பிடுவதை நோக்கும் போதே புரிகிறது முதல் வருகையின் சுவடுகள் அழிக்கப்படுகின்ற. மேலும் அவர்  அவர் காலத்தில் ஆண்டு நின்ற ஹென்றி என்ற அரசருக்கு எழுதிய மடல்களை எடுத்துப் பார்த்தால் 21-ம் நூற்றாண்டு ஆரம்ப காலகட்டம்  அவருக்கு பிடித்தது என்றும் அப்போது மார்க்கங்கள் அத்தனையும் மடிந்து போவதையும் உண்மையான தெய்வீக மனிதர்கள் சிலர், கடவுளின் சட்டங்களை காப்பவர்கள் என சொல்லிக் கொள்ளும் போதகர்களை பிடித்து,  அந்த உண்மையான தெய்வீக மனிதர்கள் நசுக்குகிற காட்சிகளையும் விவரித்து சொல்வது விந்தையிலும் விந்தையாய் இருக்கிறது.

இப்படி தானியேல் கண்டகாட்சிகளை ஆமோதித்து பலரும் தீர்க்க தரிசனங்களிலே தமிழ் சித்தர்கள் வரை எழுதியிருக்கிறார்கள்.

முத்துகுட்டி தன் தீர்க்கதரிசனத்திலே பூமியில் இறைவனின் நியாயதீர்ப்பு நடைபெறும் காலம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் இறுதி ராஜாவின் 100ஆண்டு கால முடிவிற்கு பிறகு தான் நியாயதீர்ப்பு பூமீயில் வரும் என்று சுட்டிகாட்டியிலிருந்தே 21-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த சிறப்பு காட்சிகள் அரங்கேற்றம் ஆகின்றன என அறிந்த கொள்ள முடிகிறது.

அப்போது இந்தியாவை ஒருவர் தன் தனித்தன்மையில் கட்சி பலமின்றி ஆட்சியை பிடிப்பார் என்று குறிப்பிட்டு இருப்பதையும், கோரக்கன் கிள்நாமக்காரர் ஆட்சி என BJPஆட்சியை குறிப்பிட்டிருப்பதையும் பார்த்தால் மாநில வாரியாக நான்கு பெண் அரசுகள் தோன்றும் காலம் என்றும் ஊகிக்க முடிகிறது.

இன்னொரு வகையில் பார்சீய குரு வட இந்தியாவில் வந்தவர் இந்தியா சுதந்திரம் அடைவதற்க்கு முன்பாக வாழ்ந்து மறைந்தவர் இந்தியா சுதந்திரம் அடையும் ஆண்டையும் அப்போது இந்தியா பாகிஸ்தான் என இரண்டாக பிரிவினையாகும் என்றும் நேரு குடும்பம் ஆட்சிக்கு வருவதையும் அதில் பெண் அரசாட்சி ஏற்பதையும் அதற்கு பிறகு கலப்பட ஆட்சி ஓடி மறையும் என்றும் இறுதி காட்சியாக குஜராத்திலிருந்து ஒருவர் வந்து இந்திய அரசாட்சியை தலைமையேற்பார் என்றும் அப்பொழுது பெண்ணரசுள் தோன்றும் என்றும் அந்த தோன்றும் பெண்ணரசில் ஒரு மாநிலத்தில் இறையரசு துவங்கும் என்றும் அவர் "காஸ்மிக்பவர் "கொண்டவர் என்றும் அண்டசராசரத்தை ஆட்டிபடைக்கும் அற்புதம் கொண்டவர் என்றும் அதற்கான காலம் குரு கடக ராசியில் வரும் போது காலம் கடமையை செய்யும்   என்றும் சொல்லியிருப்பதை இத்தோடு சேர்த்து கவனித்தால் சிம்மத்திற்கு வந்திருக்கும் குரு பெண்ணின் அரசுகள் பெருமையுடன் வந்து நிற்க காலம் தன் கடமையை செய்து முடிக்க கனிந்த நேரம் வந்து விட்டதோ என எண்ணத் தோன்றுகிறதோ?

 இப்படி காலத்தை கச்சிதமாய் அடையாளம் காட்டி நிற்கும் நேரத்தில் பெண் அரசு நான் வரும் பெருமைக்கு அடையாளம் என தமிழ் சித்தர் முத்துகுட்டி சொன்ன வார்த்தைகளையும், யோவான் திருவெளிப்பாடில் தாய் என்ற நாமத்தை தமக்கு அடையாளமாய் சூட்டிக் கொள்பவரும் மதுவை மாநிலத்தில் மலிவுபட செய்பவரும் என சுட்டி காட்டுகின்ற போது அந்தநாள் நெருங்கிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

இப்படி வருவதற்கு முன் அவ்வரசு ஆட்சியிலிருக்கும் காலத்தில் தண்ணீரால் இடர்படும் காட்சிகள் இடம்பெறும் என்ற வார்த்தையும் சேர்த்து கவனித்தால் யோவானின் திருவெளிப்பாடு காட்சிகள் மெய்ப்பட்டு நிற்பதாய்  (திவெ18:21) தோன்றுகிறது.

இயேசுவால் அடையாளம் காட்டப்பட்ட தானியேலின் தீர்க்கதரிசனம் நடுங்க வைக்கும் தீட்டு திருவிடத்தில் காணுகின்ற போது என்பதை மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

எனவே இறுதிகால திருச்சபை ஏற்பட்டு 1290 நாளில் அந்த திருச்சபையில் நடுங்க வைக்கும் தீட்டு நடக்குமே ஒழிய இவர்கள் செய்வது போல் நாட்களை வருடமாக்கி வாரத்தை வருடமாக்கி செய்யும் எந்த கணக்கும் புள்ளிக்கு உதவாது.

எனவே தானியேல் கண்ட கனவு இறுதியை பற்றிய காட்சிகள் அனைத்தையும் மூடிவை வீணாக அநேகர் முயற்சி செய்து  (தானி12:4) வியாக்கியானம்  செய்வார்கள் என சொல்லியிருப்பதை உற்று நோக்கினால் இன்றைய இவர்கள் கணக்கீட்டு முறைகள் இவர்களை பற்றி தானியேலின் கணிப்பு சரியாகத்தானே இருக்கிறது.

பல விஷயங்களில் இந்த விஷயம் உட்பட இறுதிகால திருச்சபைக்கு மட்டுமே புலப்படும். அப்படியிருக்க இவர்கள் எதை ஆதாரமாய் வைத்து கணக்கைத் தொடங்குகிறார்கள்?

நல்ல ஆராய்ச்சியாளராக தன்னை காட்டிக் கொண்ட வொய்ட் அம்மையார் கூட 2300நாட்களை வருடங்களாக்கி சாலமோன் ராஜா கட்டிய ஆலயத்திலிருந்து கணக்கிட்டு தன்னுடைய பயணக்கணக்கில் நட்றாற்றில் நின்றது போல கரையேராமல் போனதையும் கண்டோம்.

அதற்கு பிறகும் சரி இன்னும் எல்லோரும் தானியேலின் வாரத்தையும் நாட்களையும்  வருடங்களாக்கி வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான குட்டையில் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் உண்மையை அறிய வேண்டுமானால் இறைவனின் இறுதிகால திருச்சபையை நோக்கிதான் தேட வேண்டும்  அவர்கள் தான் இதற்கு விளக்கம் அளிக்க முடியும்.

வேதங்களில் சென்று விளக்கம் தேடி நின்றாலும் இறுதி காலகட்டம் மேற்கூறிய அனைத்து வசனங்களோடும் ஒத்திருக்கிறது.

எசாயா தீர்க்கதரசி இறுதியில்  தென்னகத்தே வரும் அந்த அரசி வான்வெளி கோள்களையும், வான்வெளி நட்சத்திரங்களையும் ஆராய்ந்து பார்த்து பலன்களை சொல்லி நிற்கும் ஜோதிடக் கூட்டத்தை வைத்திருப்பார் (எசா47:13) என்ற தகவலையும் தருகிறார்.

இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது தானியேல் கண்டகனவு நனவாகும் நேரம் வந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

இப்படி எண்ணத் தோன்றும் காட்சிகளின் எண்ணத்தில் என்னத் தோன்றுகிறது என்றால் அந்த காட்சிகள் மிக மிக அருகாமையில் இருப்பதாய் தோன்றுகிறது இக்கால கட்டம் தானியேலின் கனவு நனவாக போகிறது.

யோவானின் தீர்க்கதரிசன திருவெளிப்பாட்டில் வானத்திலிருந்து நகர் ( புதிய எருசலேம்) இறங்குவது குறிப்பிடப்படுகிறது.

மெய்யான காட்சிகள் என மெய்சிலிர்த்து நிற்கும் நமக்கு தழிழ் தீர்க்கதரிசி முத்துகுட்டி பாடல் வரிகள் மனதை தழுவிச் செல்கிறது. "மன்முறை தெளிந்தன்றும் மான்கன்று ஈன்றன்றும் யுகபரம் உனக்குள் ஆகி நகர் ஒரு பகற்க்குள் ஆக்கி " என்று நினைக்கின்ற பொழுது எசாயாவின் கூற்றில் ஒரே நாளில் எவரேனும் இறுதியில் நடப்பதை போல்  "ஒரு நகரை "உருவாக்க முடியுமோ ? என்று கேட்கும் கேள்வி நம் சிந்தனையை தட்டி நிற்கிறது.

ஆந்திராவிலே அவதாரம் செய்த பிரம்மங்காரு தான் கண்ட தீர்க்க தரிசனங்களை திவ்யமாய் காலஞானம் என்ற நூலில் உரைத்து வைத்த போது காலத்தின் கணக்கை கவனமாய் கொடுத்து நிற்க அவர் முற்பட்டபோது ஆண்டை கண்டு பிடிக்க அவர் கொண்டு நின்ற கணக்கு முறை மிக எளிதானது என தற்போது கூறமுடியும் நாட்டை ஆண்டு வரும் அனைத்தையும் சொன்ன அவருக்கு இறுதி கால தீர்க்கதரிசனமாய் இறக்கி வைக்க வரும்போது தானே இறுதி கால புருஷனாய் சித்தரித்து காட்டுகிறார்.

தானே வந்து இவ்வுலகில் திருச்சபையை ஏற்படுத்த தகுந்த இடத்தை தான் தேர்வுசெய்து நிற்க 9.9.2009 -ல் முடிவு செய்து அதற்கான முகாந்தரத்தை அந்த மாதத்திலே அச்சாரம் கொண்டு துவங்குவதாய் அந்த இடம் தமிழ்நாடு என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இப்படிபட்ட காலத்தில் வீரபிர்மேந்திர பிரம்மம் ஆகிய பிரம்மங்காரு தன்னுடைய அரசாட்சியை அகில உலக அரசாக மாற்றும் காலம் தமிழ் மண்ணிலிருந்து ஒருவர் இந்தியாவின் முதல்  குடிமகனாக இந்திய அரசின் பெரும்பதவியில் அமர்ந்து ஆட்சி செய்து பதவியிறங்கி பின் பத்தாம் ஆண்டில் நான் வருவேன் என பிரம்மாங்காரு சொல்லியதிலிருந்து கவனிக்கின்ற பொழுது தமிழ் மண்ணில் மலர்ந்த திரு. அப்துல் கலாம் என்ற பூ மலர்ந்து ஜனாதிபதி பீடாத்தை அலங்கரித்த ஆண்டு 2002 பதவியிறங்கியது 2007.

அப்படிபார்த்தால் 2007 -ல் இருந்து பார்த்ததில் பத்தாம் ஆண்டு என்பது 2016-2017  பிரம்மங்காரு சொல்லியிருப்பதை எண்ணும்போது இயேசுவின் பிறவிகளில் பிரம்மங்காரும் ஒன்று என்ற எண்ணம் தோன்றுகிறது.

இயேசு இல்லையேல் எலியா தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும் எப்படியயோ திரித்துவத்தில் ஒருவராக பிரம்மங்காரு இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

அவர் சொல்லும் மற்ற அடையாளங்களும் இன்றைய காலத்தோடு ஒத்திருப்பதை பார்க்கின்ற போது ஆச்சரியப்பட வைக்கிறது.

இவரும் பேசும் மிருகம் என ஒரு மாட்டை உருவகமாய் சொல்வதுபோல் பைபிளிலும்  புதிய மிருகம் என்றும் குரானிலும் புதிய அதிசிய பிராணி என்றும் சொல்லப்பட்டிருப்பதை உற்று நோக்குங்கள்  தமிழ் தீர்க்கதரிசிகளும்  "காளை நிகராங்குடையோர் கனத்த பெருமைக்கும் "வாயை பொத்தா மானுடர்க்கு அது வல்விலங்காய் தான் மாறும் என்று சொன்ன தமிழ்  தீர்க்கதரிசிகளின் கருத்துக்களும் ஒத்து போயிருக்கின்ற.

இதேக் கருத்தை யோபு பழைய ஏற்பாட்டில் இறுதியில் அரசாட்சி செய்ய வரும் காளையைப் பற்றி உருவகப்படுத்தி பேசிய விதமும் ஏனைய தமிழ் சித்தர்கள் கூறிய தீர்க்க தரிசனங்கள் தெளிவாய் உரைக்கும் காட்சிகளும் ஒன்றாய் இருப்பதை பார்த்தால் வியப்பாய் இருக்கிறது.

ஐரோப்பா கண்டத்திலே தேடிப்பிடித்து நோக்கினால் காலத்தை அறிய ஒரே ஒரு துருப்புச் சீட்டு நாஸ்ட்ராடாமஸ். அதை அடுத்து தேடினால் போப்பாண்டவர்களின் கணக்கை கொண்டு காலத்தை கணக்கிட முயன்றவர் ( மலாக்கி) அரபு நாடுகளை பொருத்தவரை இஸ்லாம் மார்க்கத்தில் எழுந்து நிற்பது குரான், இஸ்ரேலை பற்றி எழுந்து நிற்பது கிருஸ்த்துவ பைபிள் ஆனால் இந்தியாவை பொருத்த வரை தெள்ளத்தெளிவாய் சொல்லி நின்ற சித்தர்கள் என்னிக்கை அதிகமாகத்தான் இருக்கிறது.

தென்னிந்திய சித்தர்கர்களை கொண்டு தோன்றும் இடத்தை தமிழ்நாடு என்று கண்டு பிடிக்க முடிகிறது. இது மற்றைய தீர்க்கதரிசனங்களை காட்டிலும் தமிழ் சித்தர் தீர்க்கதரிசிகளின் தீர்க்க தரிசனங்கள் பெரிதும் உதவுகின்றன அப்படி பார்த்தால் இந்த பத்து வருட கணக்கை பவிசாய் சொன்ன பிரம்மங்காரு போல் தமிழ் தீர்க்கதரிசிகள் காகபுசண்டரும், தலையாட்டி சித்தரும், போகரும், முத்துகுட்டியும் சொன்னத் தீர்க்கதரிசனம் ஒத்து போகின்றன.

முத்துகுட்டியும் தன் தீர்க்க தரிசனங்களில் இரண்டு இடங்களில் இதை குறிப்பிட்டுநிற்கிறார்."கொற்றவர் தானும் ஆண்டு குறும்புகள் மிகவே பெருத்து உற்றதோர்துளுக்கன் வந்து உடனவன் விழுந்தோடி மற்றதோர் பத்தாமாண்டில் நாம் வருவோம் "என முன் ஆகம விதிப்படி என்று சொல்லியிருப்பதை காணுக்கின்ற பொழுது பிரம்மங்காரோடு ஒத்து பார்க்கின்ற போது அவரை விட ஒருபடி மேலாய்போய் தமிழ்நாட்டு துளுக்கன் ஒருவர் ஜனாதிபதியாகும் காட்சியை விவரிக்கிறார்.

இது அப்துல்கலாம்  என நாம் கண்டு பிடிக்க பேருதவியாய் இருக்கிறது அல்லவா, விழுந்து ஒடி என்று சொல்லுகின்ற போது அந்த வருடத்திலிருந்து பத்தாமாண்டு எனக்கொள்வது எளிதாகிறது.

இதே பாட்டை " கொற்றவர் தானும் ஆண்டு குறும்புகள் மிகவே பெருத்து உற்ற நசுறாணி உடன் வந்து மற்றதோர் ஆண்டுதன்னில் நாம்வருவோம் என சொல்லியிருப்பதிலிருந்து.. மத்தியில் ஏற்படும் இரண்டாண்டு ஆட்சியை குறிப்பிடும் காலமாய் இருக்கிறது என்று எண்ணும்போது காங்கிரஸ் ஆட்சிமுடித்து இரண்டாண்டு கால BJP மோடி அரசை முகாந்திரம் காட்டி நிற்பதாய் தோன்றுகிறது.

இப்படி அந்தரமாய் நிகழும் காலம் சூரியன் அந்தகாரப்படும் காலமாய் இறுதிகாலம் இங்கு பூமியில் எழும்பும் காலமாய் இருக்கப்போகிறது  என்று குறிப்பிட்டு காட்டுகின்றபோது  மிகத் துள்ளிய கணக்கை தூபம்போட்டு காட்டியவர்கள் தென்னிந்திய சித்தர்களாய் அதுவும் தமிழ் சித்தர்களாய் இருப்பதை நினைத்து  தலைநிமிருவோம் தமிழனாய் பிறந்ததற்கு.

எனவே இவைகளெல்லாம் ஒன்று போல் இருந்தாலும் இந்திய தமிழ் தீர்க்கத்தரிசிகள் கால அளவை எட்டிபிடிக்க கச்சிதமாய் வழிமுறைகளை சொல்லிநின்றாலும் கிருஸ்த்துவ மதத்திற்கு மட்டும் கால அளவைப்பபற்றி பேசியவன் தானியேல் தீர்க்கதரிசி அடுத்து காலத்தை குறித்து நிற்பவன் யோவான் மட்டுமே.

தானியேல் இறுதி அத்தியாயத்தில் இறக்கி வைத்த கருத்துக்கள் இறுதியில் வரும் இறைசபைக்கு மட்டுமே தெரியும் என்பதால்  முடியும் என்பதால் மற்றைய எந்த மார்க்கத்தை சார்ந்தவரும் குறிப்பாக கிருஸ்த்துவ மதத்தை சார்ந்தவர்கள் பைபிளை தன் கையிலேக் கொண்டவர்கள் இவ்விடத்தை எட்டிப்பிடிக்க இயலாது .

ஒரே துருப்பு சீட்டு பைபிளை சார்ந்தாவர்களுக்கு தானியேல் ஒருவனே என்றால் அந்த துருப்பு சீட்டும்  இறுதி சபையாளருக்கு மட்டுமே புரியும்.

எனவே இவர்களை பொருத்த வரை கணக்கு பார்க்க பயனில்லாத துருப்புச்சீட்டு தானியேல். இறுதி சபைக்ககோ நல்ல துருப்புச்சீட்டு இந்த தானியேல்.

ஆராய்ச்சியின் அடிப்படையில் நுட்பமாக ஆராய்ந்து  பார்த்தால் அவனால் எழுதப்பட்ட இறுதி வரிகளை  முடிவின் வரிகளை முகர்ந்து பார்த்தால் ஒருவாசனை தெரிகிறது.

இறுதியில் எழுப்பப்படும் சாட்சிகளில் ஒன்று எலியா (மலாக்கி& இயேசு கூற்று) ஈனோக் என்றும், சாலமோன் என்றும், திருமுழுக்குயோவான் என்றும், யாக்கோபு என்றும் எப்படி அழைத்தாலும் அவர் எடுக்கும் பிறவிகளை வரிசைப்படுத்த முயன்றால் தானியேலையும் அதில் சேர்க்க வேண்டியிருக்கிறது .

எனவே தானியேல் இறுதியில் அங்கம் பெறும் இறைச்சபையில் மீண்டும் பிறந்து மரணித்து எழுப்பப்படும் சாட்சிகளில் ஒருவராகத் தான் காணமுடிகிறது.

இப்பொழுது இதுவரை தானியேல் என்பவரும் அவருடைய நாள் கணக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு துருப்புச் சீட்டாய் இல்லாமல் கருப்புச் சீட்டாய் தான் இருந்தது ஆனால் இப்போது காலம் விடியலை தருவதால் கருப்புச்சீட்டாய் நின்ற இந்த துருப்புச்சீட்டு எல்லோருடைய விருப்பு சீட்டாக மாறும் நிலை வந்துவிட்டது.

பித்தலாட்ட காரர்களுக்கு வெறுப்பு சீட்டாய் அமையும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.