15/12/2017

தமிழினமே விழித்துக் கொள்.. இல்லை என்றால் கண்டிப்பாக இது எல்லாம் நடக்கும்...


மீத்தேன் எடுக்கிறேன் என்ற பெயரில் தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார
பகுதி மக்கள் பலலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை விட்டு துரத்தப்பட்டால் நடைபெற போவது என்ன?

தஞ்சையை சுற்றி உள்ள மாவட்டங்களின் நில மதிப்பு தானகவே உயரும்...

அரசு தரும் வழிகாட்டி மதிப்பு தொகையை வைத்துக் கொண்டு. நிலத்தை இழந்த விவசாயியால் ஒரு வீட்டுமனைக்கூட வாங்க முடியாமல் போகும்.

இருக்கும் வீடுகளின் வாடகைகளும் தாறுமாறாய் ஏறும்.

அதிகப்படியான மக்கள் நகரத்தை நோக்கி நகர்வதால்.. குறைந்த பட்ச கூலியானது அதளபாதாளத்திற்கு செல்லும்.

தன் சொந்த ஊரில், நூறுவீட்டார நம்பி மளிகைக்கடை வைத்திருந்தவர்.. அகதியாய் வந்த இடத்தில் வாய்பில்லாமல் கூலியாவார்.

பத்து ஆட்டை மேய்த்து வாழ்ந்து வந்தவர் வாய்பின்றி முடக்கப்படுவார்.

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி  காலம் கடத்தியவர்.. நகரத்தில் நாட்களை நகர்த்த முடியுமா.

வேலி பிரண்டையில் செலவில்லாமல் சோறு திண்றவன் கேரட்டுக்கும், பீன்சுக்கும் எவ்வளவு செலவளிப்பான்.

களை பறித்து கஞ்சிக் குடித்த எம்மக்கள்
நகரத்தில் எதை பறித்து பிழைப்பு நடத்துவார்கள்.

பள்ளி சென்ற குழந்தைகளோ, பணத்தட்டுப்பாட்டாலும்.. நகரங்களின் கல்வி கொள்ளையாலும் படிப்பை கைவிட வேண்டி வரும்.

இருக்கும் பணம் தீர்ந்தவுடன்.. குடும்பம் வேலைத்தேடி திசைக்கு ஒன்றாக உடையும்.

தட்டிக்கேட்ட ஆளில்லாமல் தலைவனும் தலைவியும் தடம் மாறும் சீர்குழையும் நடக்கலாம்.

வேலையற்ற இளைஞர்களால் கொள்ளையும் கொலையும் பெருகலாம்.

அப்பன் அருகில் இல்லா காரணத்தால்
மகன் குடிக்கும், கூத்துக்கும் ஆட்படும் ஆபத்து இருக்கிறது...

வாழ்நிலம் அதுவே வாழ்ந்த, வாழும் வாழ்க்கைக்கு ஆதாரம்..

நிலத்தை இழந்தால் சுகத்தை இழப்போம்....

ஹைட்ரோ கார்பனை தமிழ் நிலத்தில் இருந்து விரட்டுவோம்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.