21/12/2017

நெற்றியில் திருநீறு அணிவதால் என்ன நன்மை.?


நம் முன்னோர்கள் விபூதியை பட்டையாக நெற்றியில் பூசுவர்.

இந்த விபூதி பெரும்பாலும் பசுவின் சாணம் மற்றும் சில மரங்களை எரித்து அதில் இருந்து தயாரித்தனர்.

பிறக்கும் போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும் போது மண்ணிலே தான் சாகப் போகிறோம்.

மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத்தான் போகிறது.

நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம்.

இந்த வாழ்க்கை மாயமானது.

நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான்.

இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம்.

மேலும் இந்த சாம்பல் பாக்டீரியவை கொல்லும் திறன் கொண்டது.

எனவே காய்ச்சல் அல்லது உடல் நலகுறைவின் பொழுது பயன்படுத்தபடுகிறது.

விஞ்ஞான பூர்வமாக அது சைனஸ் பிரச்சினைகள் மற்றும் மற்ற பாக்டீரியல் நோய்களை தடுக்கிறது.

இந்த சாம்பல் ஈரபதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது.

எனவே இது நெற்றியில் உள்ள நீரை உறிஞ்சி விடுகிறது.

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கியப்பாகம்.

அதன் வழியாக மிக அதிகமாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும்.

இது ஒரு வர்ம ஸாதனம் கூட.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும்.

மேலும் இந்த சாம்பல் ஈரபதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது.

எனவே இது நெற்றியில் உள்ள நீரை உறிஞ்சி விடுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.