20/01/2018

BIMSTEC எனும் திட்டத்திற்காக தமிழினத்தை திட்டமிட்டு அழித்துக் கொண்டிருக்கின்றனர்...


2004 - 2005ஆம் ஆண்டுகளிலிருந்து திட்டமிடப்பட்டு, இன்று வரை தமிழ்நாடும், தமிழீழமும் சந்தித்துக் கொண்டுள்ள பேராபத்துகளை - சந்திக்கவுள்ள பேராபத்துகளை - எதிர்கொள்ளவுள்ள இராணுவமயமாக்கல் நடவடிக்கைகளை - சூழலியல் அழிப்புத் திட்டங்களை - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நாம் பெற்ற விடைகளை - அரசின் ஆவணங்களிலிருந்து கிடைத்த அதிர்ச்சித் தகவல்களை தொகுத்து நூலாக்கியுள்ளேன்.

பிம்ஸ்டேக் - பேரழிவில் தமிழர் தாயகங்கள் - நூலின் பெயர்...

பன்மை வெளி வெளியீட்டகம் வெளியிட்டுள்ள இந்த புதிய நூல்...

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - சிறப்பு அரங்கம்  B (அரங்கு 42 - 43க்கு எதிரில்) விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சூழலியல் செயல்பாட்டாளர்களும், தமிழின உணர்வாளர்களும் வாங்கிப் படித்து, நாம் இனி வரப்போகும் எதிர்காலத்தை சரிவரத் திட்டமிட்டுக் கொள்ள - செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

நூலெழுதும் போது, கருத்துகள் கூறி - செமைப்படுத்தி - வழிநடத்திய - தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர்  ஐயா பெ. மணியரசன், பொதுச் செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன், நூலை வெளிக் கொண்டு வந்த பன்மை வெளி வெளியீட்டகம் பொறுப்பாளர் தோழர் பாலகுமரன் அறிவன் தமிழ், மெய்ப்பு திருத்தி உழைத்த தோழர் ஆனந்தன் இலக்கியன், அட்டை வடிவமைத்த பாவலர் Kavi Baskar, தகவல்கள் அளித்து உதவிய Rathish Kumaran உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியும் நேசமும்!

தோழமையுடன்,
க. அருணபாரதி,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
18.01.2018
பேச: 9841949462...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.