12/04/2018

ஆறு (காவேரி) - நீர் - மறைநீர் / virtual water - தொழிற்சாலைகள்...


இது பழையபதிவின் தொடர்ச்சியே...

தமிழகத்தின் நீர்த தேவைகளைப்பற்றிய ஒரு கணக்கீடு…

மறைநீரைப்பற்றிய wiki
https://en.wikipedia.org/wiki/Virtual_water

சென்னை கார் :

13 லட்சம் (Hyundai 7 L, Ford 2 L, Renault-Nissan - 4 L) கார்கள் தமிழகத்தில் உற்பத்தியாகின்றன ஆனால் தமிழகத்தின் தேவை 3 லட்சத்தை தாண்டுவதே கடினம் (இந்தியாவின் மொத்த விற்பனை 30 லட்சம் கார்கள்)

ஒரு காருக்கு 2,00,000 லிட்டர் மறைநீர் தேவை (மிகக்குறைவான கணக்கு)
260,000,000,000 litre இதை 0.0353147 பெருக்கினால் கன அடியாக மாற்றலாம்..
9,181,822,000 கன அடி அதாவது
9.181 TMC (thousand million cubic foot)
கிட்டதட்ட 7 TMC தண்ணீர் தமிழகத்திற்கு தேவையில்லாமல் செலவாகிறது… அப்ப வேலைவாய்ப்பு என்று கேட்கலாம் தண்ணீர் கிடைக்காமத்தானே விவசாயம் பண்ணமுடியாமல் நகரத்தை நோக்கி வந்தீர்கள் இந்த தண்ணீரை விவசாயத்திற்கும் பயன்படுத்தினால் நன்றாக இருக்குமல்லவா…
https://en.wikipedia.org/wiki/Automotive_industry_in_Chennai

சென்னையின் தண்ணீர் தேவை
நீர் சேமிப்பு நான்கு ஏரிகளை சேர்தது மொத்தக்கொள்ளவு 11.257 TMC இது வீராணம் ஏரியின் கொள்ளவும் .33 TMC இவை மழைகாலங்களை தவிர இவற்றிலிருந்து சென்னைக்கு நீர்தேவைக்கு அனுப்புவதாக வைத்துக்கொள்ளுவோம்… சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களின் மக்கள்தொகை 1 கோடி என வைத்துக்கொள்ளுவோம்…
http://www.chennaimetrowater.tn.nic.in/reserve.asp

ஒரு நபருக்கு 300 லிட்டர் பயண்பாடு ஒரு நாளைக்கு (மதுரையில் ~375 லிட்டர் ஒரு குடும்பத்திற்கு என்று ஒரு இந்திய கணக்கீட்டில் காமித்திருக்கிறார்கள். அதிலும் சென்னை இடம் பெறவில்லை அப்படியென்றால் சென்னையில் தண்ணீர் அவ்வளவு அரசு கொடுப்பதில்லை என்று அர்ததம்)

1,09,500 லிட்டர் வருடத்திற்கு
3866.9559 கன அடி ~4000 கன அடி வருடத்திற்கு
40,000,000,000 கன அடி ஒரு கோடி பேருக்கு
40 TMC

சென்னையில் ஒருவருக்கு 300 லிட்டர் சாத்தியமே இல்லை மேலும் இதை சென்னைவாசிகளுக்கு தெரியும் நான் கேகே நகரில் இருந்தவரை இவ்வளவு குடும்பத்திற்கு கூட கொடுப்பதில்லை… அப்ப மற்ற பகுதிகளில் கணக் கெடுத்துக் கொள்ளுங்கள்..

சென்னையில் முக்கால் வாசி நிலத்தடி நீர்தான் பயண்பாடு .. குடிதண்ணீர் மட்டும்தான் அரசு தரும்… அதுவும் can தண்ணீர் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது… 5 TMC கூட சென்னை வாசிகளுக்கு கொடுக்கமாட்டார்கள்… மற்றவை தொழிற்சாலைகளுக்கும், பொதுபயண்பாட்டிற்குமே போகும்… கிட்டதட்ட 20 TMC கார் மற்றும் இதர தொழிற்சாலைகளுக்கே கொடுக்க சென்னையில் தண்ணியில்லை… இதில் எப்படி மக்களுக்கு கிடைக்கும்… இதில் பொதுப்பயன்பாட்டுக்கு (service sector) கணக்கில் எடுக்கவில்லை அதற்கு எங்கேயிருந்து கொடுப்பது…

தமிழ்நாட்டின் நீர் தேவை:
தமிழ்நாட்டிற்கு கிட்டதட்ட 320 TMC தண்ணீர் மக்களுக்கு தேவைப்படுகிறது ஆனால் தமிழகத்தின் மொத்த மழையளவு கிட்டதட்ட 4000 TMC ஆனால் டெல்டா மாவட்டம் விவசாயத்திற்கும் 177 TMC க்குதான் போராட்டம்… இங்கே கவனிக்கப்பட வேண்டியது நமது தண்ணீர் பெரும்பான்மை இந்த தொழிற்சாலைகளுக்கே போகிறதனால் இந்த நிலைமை.. தமிழகம் தொழில் வளர்ச்சியில் முதன்மையில் உள்ளது என்று பெருமையாக பேசுவோமே அதற்கு நம் தண்ணீரை தாரை வார்ததுவிட்டு 177 TMC காவிரியில் வேண்டுமென்ற போராட்டம்… இதே நிலைதான் கர்நாடக மக்களுக்கும் அவர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் காவிரி தண்ணீர் முழுவதும் விவசாயத்திற்கு பயப்படுவதாக இல்லை அங்கும் தொழிற்சாலைகளுக்கு நீர் தாரை வார்ககப்படுகிறது அதை பேசாமல் இரு மாநிலங்களும் அடித்துக்கொள்வதில் மக்கள் பயண்பெறப்போவதில்லை!!

நாமக்கல் முட்டை:
தினமும் 3 கோடி முட்டைகள் தயாராகின்றன
3 கோடி முட்டைகள் தினமும்
3*365 = 1095 கோடி முட்டைகள்
175 (188) லிட்டர் மறைநீர் ஒரு முட்டைக்கு
191,625 கோடி லிட்டர்ஒரு வருடத்திற்கு -
6767.1793875 கோடி கன அடி
67.67 TMC
~70TMC இரண்டு மூன்று முறை சரிபார்ததுவிட்டேன் ஒருநாளைக்கு 30 லட்சம் முட்டை சாப்பிடுவோமா அப்ப கிட்டதட்ட 63 TMC மறைநீர் மற்றவர்களுக்காக செலவிடுகிறோம்… இதெல்லாம் சரி நுகர்வு சந்தையில் முட்டையின் மதிப்பு 5 ரூபாய்க்கு மேல் ஆனால் அவர்கள் விற்கும் விலையை மிகக்குறைவு கிட்டதட்ட விவசாயிகளின் நிலைதான் அவர்களுக்கும்!!

திருப்பூர் ஆடைகள்:
400 கோடி துணிகள் ஏற்றுமதியாகின்றன இந்த எண்ணிக்கை தோராயமானது 2004 வரைக்கும் தமிழ்நாடு அரசு இந்த எண்ணிக்கையை கணக்கில் வைத்திருக்கிறது மற்றதை மதிப்பைவைத்து கணக்கிட்டது
1000 லிட்டர் மறைநீர் ஒரு துணிக்கு
4000,000,000,000 லிட்டர்
141,000,000,000 கன அடி
141 TMC
35 TMC for 100 கோடி துணிகளுக்கு இந்தியமதேவைக்காக
~175TMC மொத்தச்செலவு!
40,000 கோடி தொழில் நடக்குமிடத்தில் சராசரி சம்பளமாக 9,000 இருக்கிறதை கவனிக்கவேண்டும் அதாவது நமது தண்ணீரையும் உடல் உழைப்பையும் எடுத்துக்கொண்டு மக்களுக்கு கிடைப்பது இவ்வளவே?!

வேலூர் தோல் தொழிற்சாலைகள்:

இவற்றைப்பற்றி சரியான தகவல்கள் கிடைக்கவில்லை
17,710 லிட்டர் மறைநீர் ஒரு கிலோ தோல் உற்பத்தி செய்ய
10,000 கோடி ஏற்றுமதி (ஆனால் இணையதளத்தில் இந்தியாவின் தோல் ஏற்றுமதி கிட்டதட்ட 3 லட்சம் கோடி என்கிறது அதன்படி 1 லட்சம் கோடி வேலூரில் (30%) நடைபெறவேண்டும்)
நம்ம கணக்கிற்கு  25,000 கோடி
1000 ரூபாய் ஒரு கிலோ தோல் பொருளுக்கு 25 கோடி தோல் பொருள்கள்
427,500,000,000 லிட்டர்
15,097,034,250 கன அடி
15 TMC
5 TMC for local market
~20TMC

கிட்டதட்ட இந்த கணக்குகளில் 235 TMC மறைநீர் வளர்ச்சி என்கிற பெயரில் தமிழகத்தில் இந்த மண்ணிலிருந்து ஏற்றுமதியாகிறது… இன்னும் மற்ற தொழிலகள் மற்ற நகரங்களை கணக்கெடுத்தால் இது 1000 TMC தாண்டும் நமது மறைநீர் ஏற்றுமதி … முக்கியமாக பெப்ஸிக்கு கொடுக்கும் தண்ணீரின் கணக்கு இதில் வரவில்லை…

இதைவிட மிகமோசமானது தமிழகம் முழுவதும் தண்ணீர் கேன்கள் கிட்டதட்ட 3 TMC (320 TMC மக்கள் தேவை அதில் 1 சதவிகிதம் குடிநீர் கேன் மூலமாக என்றால்) வியாபாரம் நடக்கிறது…

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு … இவ்வளவு தமிழக தொழில் வளர்ச்சியின் பயண்கள் அனைத்து மக்களையும் சென்றடைந்திருந்தால் மக்களே விவசாயிகளுக்கு உதவ முடியும் ஆனால் இந்த வளர்ச்சி ஒரு சில முதலாளிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் என்பது மிகப்பெரிய வேதனை…

தனக்கு மிஞ்சிதான் தானம், ஆத்துல போட்டாலும் அளந்து போடனும்… எந்த பழமொழிக்கும் தற்போதைய தமிழகத்தின் நிலை ஒத்துவரவில்லை என்பது கவலைக்கிடமான விடயம்! இது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவின் மறைநீர் ஏற்றுமதியை இணைப்பு படத்தில் பார்த்தால் புரியும்... இதில் make in India திட்டம் எப்படி?!


இது வெறும் மறைநீரைப்பற்றியது மட்டுமே ஏனைய வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் சிந்தித்து பார்ததால்?!?! உள்ளடங்கிய ஆற்றல் (Embodied Energy) என்ற தலைப்பில் தொடருவோம் தேடலை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.