21/05/2018

மாட்டு இறைச்சி உண்பவர்களை மதிக்கப்பட வேண்டும் என்கிறது வேதம்...


இந்த மாட்டுக்கறி அரசியலை எத்தனை முறை நாம் புரிய வைத்தாலும் சிலர் விடாப்பிடியாக மாடுகளை அறுத்து உண்பது.. இந்து மத நம்பிக்கையின் படி பெருங்குற்றம் என்ற ரீதியில் விடாப்பிடியாக உள்ளனர்..

இவர்களை போன்றோருக்கு ஆரிய வரலாற்றில் புலால் உணவு இல்லாமல் ஆரியர்கள் இல்லை என்பதை அடுக்கடுக்கான ஆதாரத்துடன் பழைய பதிவுகளில் எழுதி இருந்தேன்..

அதையெல்லாம் ஏற்க மாட்டோம் என்று உள்ள சிலருக்கு இப்பதிவு கடுப்பை தான் ஏற்படுத்தும். ஆகவே அவர்கள் இதை படிக்க வேண்டிய அவசியமில்லை..

ஆனால் சில நடுநிலையான வேதாந்தி மதத்தில் வேத அறிவு உள்ள சிலருக்காகவே இப்பதிவு..

பசுவை தின்பது பாவமான செயலாக ஜோடிக்கப்டுகிறது.. காரணம் மத அரசியல் .

பண்டைய வரலாற்றை நாம் சொல்லிக் கொடுக்காததன் விளைவு தான் இது, பண்டைய வரலாற்றில் பசுவை உண்ட மாவீரர்கள் உண்டு..

பசு இறைச்சியை தானமாக தருபவர் மிகவும் செழிப்பானவர் என்ற வரலாறுகள் உண்டு..

பசுவை வெட்டக்கூடிய கத்தியை கோபிகர்த்தன் என்றும்..

சுரபி பக்வம் மாம்ஸ் சமைக்கப்பட்ட மணங்கமழும் பசு  இறைச்சி என்றும் வேதங்கள் கூறுகிறது..

தீர்க்கதமா என்னும் ரிஷிகள் என்று வேதம் குறிப்பிடும் பெயரை ஆய்வு செய்தால்..

பசுவை லாவகமாக பிடித்து  அருத்து சதையையும் தோலையும் தனியாக பிரித்து தருபவர்களையே அன்றைய அறிஞர்கள் சொன்னது தீர்க்கதமா ரிஷிகள்..

அவர்களுக்கான கண்ணியமும் பரிசுகளும் கொடுக்கப்பட்டதாதக கூறுகிறது. இதையெல்லாம் மிகப் பழமையான நூலான புத்த மதத்தின் மஜ்ஜிம் நிகாய் நூல் தெரிவிக்கிறது..

சரி எதனால் பசு சாப்பிடுவதை ஆரியர்கள் நிருத்தினார்கள் என்ற வரலாற்றையும் கூறுகிறது மஜ்ஜிம் நிஹாய்..

அதாவது அரசவையில் பசு இறைச்சியையே உண்டு சலித்து போன ஆரியர்கள் இனிமேல் கொழுத்த செம்மறியாட்டு இறைச்சியும் கொளு கொளுத்த குதிரை இறைச்சியையும் தான் உண்ண வேண்டும் என்று முடிவெடுத்து.

தமக்கு வேண்டுமானால் அரசவையில் உள்ள அனைவரும் இதை புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் அரசன் நமக்காக செம்மறியாட்டு கறியையும் குதிரை கறியையும் சமைக்க ஆணையிடுவான் என்று யோசித்த ஆரியர்கள்..

உருவாக்கிய நடைமுறை தான் பசு புனிதமானது என்ற கோட்பாடு...

இதை வைத்து பார்க்கும் பொழுது பசு இறைச்சியை உண்டு சலித்து போன ஆரியர்கள்.. வேறொரு இறைச்சிக்காக நாம் உண்ணவில்லையென்றால் எவரும் உன்ன கூடாது என்ற முடிவெடுத்து உருவாக்கிய தத்துவம் தான் பசு புனிதம் என்பது...

அடுத்த விஷயத்தை பாருங்கள்...

அப்பரடிகள் திருநாவுக்கரசர்..யார் இவர்?

சைவ சாங்கியதில் இவரை தவிர்த்து விட்டு சைவ மதத்தை அறிந்து விட முடியாது..

கோட்பாடுகளையும் கொள்கைகளையும் நிறையபேர் விளக்கி இருந்தாலும் அதில் முதன்மையானவர் இவர்..

திருநாவுக்கரரசர் தேவாரம் என்பது புகழ்பெற்ற பாடல்கள் அடங்கியவை..

அவ்வளவு பிரசித்தி பெற்ற இவர் சொல்லுகிறார்...

பாடல் எண் 10 இல் முதலில் அந்த பாடலை படியுங்கள் கீழே விளக்கம் தந்துள்ளேன்...

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து வானாள தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போர்அல்லோம்..

கங்கை வார் சடை கறந்தார் அங்கம் குறைந்து அழுகி தொழுநோயராய்
ஆவுரித்து தின்றும் புலையரே அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாவார்....

இதன் பொருள் என்ன தெரியுமா ?

சங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் இரண்டையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியொடு வானுலகையும், தருவாராயினும்..

[செல்வங்கள் பல தந்து பூமியையும் வானத்தையும் தந்து ஆட்சி செய்யுங்கள் என்று சொன்னால் கூட ].

ஒரு தலையாய அன்பில்லாராய் நிலையின்றி அழிவாராகிய அவரது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம்.

அவரையும் அந்த செல்வத்தையும் நாங்கள் மதிக்கமாட்டோம்.

யாரை தெரியுமா மதிப்போம் கீழே தொடர்ந்து படியுங்கள்...

உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறையுந் தொழுநோயராய்ப் பசுவை உரித்துத் தின்று திரியும் புலையராயினும்  நீண்ட சடையில் அன்பராயின் அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.

குஷ்ட நோயாளியாய் இருந்தாலும் அவர் பசுவை உரித்து திண்பாராயின் அவரை தான் நாங்கள் போற்றுவோம் வணங்குவோம் என்பதே இப்பாடலின் நோக்கம்...

இப்பொழுது என்ன செய்வது ?

ஒன்று மாட்டுக்கறியை தின்பவர்களை [முஸ்லீம் கிருத்துவர் உட்பட] மரியாதை செய்ய வேண்டும்.. இல்லையேல் அப்பரடிகள் திருநாவுக்கரசரை இந்து மத்தில் இருந்து தூக்க வேண்டும்..

எது வசதி ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.