17/06/2018

ஒசூர் காவல் நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீது சமூக ஆர்வலர் சிலம்பரசன் கொடுத்த புகாரின் பேரில் CSR பதிவு செய்து தீவிர விசாரனை...


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போரடிய போராட்டகாரர்களை சமூக விரோதிகள் என்றும், போராடினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றும் போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர்,  கொச்சைபடுத்தி மறைமுகமாக தமிழக மக்களுக்கு ஊடகங்களின் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய கோரி கடந்த 31.05.2018 அன்று கொடுத்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி  வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது வழக்கை விசாரித்த நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடிக் கொள்ளுமாறு உத்தரவிட்டதையடுத்து ஓசூர் நகர போலீசார் 10 நாட்கள் கடந்த நிலையில்  15.06.2018 இன்று ரஜினி மீதான புகாரின் மீது CSR வழங்கபட்டுள்ளது.

குறிப்பு : தமிழகத்தில் ரஜினி மீதான புகாருக்கு ஓசூர் காவல் நிலையத்தில் முதல் CSR என தகவல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.