15/06/2018

தூத்துக்குடி மாவட்டம்… மகளிர் திட்ட இயக்குநர் P.J.ரேவதியின் இலஞ்ச பட்டியல்… இலஞ்சத்தில் அமைச்சருக்கு பங்கு...


தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் P.J ரேவதி அவர்களின் மகளிர் சுயஉதவிக்குழு நடத்தும் பெண்களிடம் தொடர்ந்து இலஞ்சம் வசுலித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து தேசிய நகர் புற வாழ்வாதார இயக்க மகளிர் குழு பெண்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ் யிடம அளித்த  புகாரில்  திட்ட இயக்குநர் பி.ஜே .ரேவதி லஞ்சமாக கேட்கும்  பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.. இதோ பட்டியல்..

சுழல் நிதியில் ரூ10,000க்கு இலஞ்சம் ரூ.1000/-

வங்கிகடன் பரிந்துரை கடிதத்திற்கு ரூ.2000/–

SHG(self help group)ஊக்குநர்பயிற்சிக்கு ரூ.2000/-

உறுப்பினர் பயிற்சிக்கு ரூ.1000/-

புதிய சமுதாய அமைப்பாளர் பணிக்கு ரூ.50,000/-

பணியிடம் மாற்றத்திற்கு ரூ.50,000/-,-

ALF பகுதி அளவிலான அமைப்பு பயிற்சிக்கு ரூ10,000/-

ALF சுழல்நிதி ரூ50,000க்கு இலஞ்சம் ரூ.5000/-

பூமாலை வணிக வணிக வளாக கடைக்கு ரூ.3000/-

CRP ஊதியம் ரூ.500ல் கூட ரூ.200/- என்று பட்டியல் போட்டு லஞ்சம் வசூலிக்கிறார்.

இது பற்றி விசாரித்த போது ரேவதியிடம் 96குழுக்கள்,  வேணி 50குழுக்கள், தேவசகாயத்திடம் 180குழுக்கள், டவுன் பஞ்சாயத்து 100குழுக்கள் என கடந்த ஆண்டு  451 மகளிர்குழுக்களும், இந்த ஆண்டு 302 மகளிர் குழுக்களும் இயங்கி வருகிறது. திருச்செந்தூரில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு இலவச வாகன ஓட்டுவதற்கு பயிற்சி 50 பேருக்கு வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது. பல இலட்ச ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் கடந்த 5ம் தேதி கோவில்பட்டியைச் சேர்ந்த சுப்புலெட்சுமி என்ற பெண் அங்குள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மூலம் ரூ.19700/-வங்கியில் செலுத்தியுள்ளார். திட்ட இயக்குநர்  ரேவதி அபிராமி தங்கம் என்பவர் பெயரில் பினாமி  வங்கி கணக்கு துவக்கியுள்ளார்.  திட்ட இயக்குநர் ரேவதிக்கு நாகர்கோயில் சொந்த ஊர் என்பதால் நாகர்கோயில் அருகே உள்ள வடிவீஸ்வரம் ஸ்டேட் வங்கியின் கிளையில் வங்கி கணக்கு எண்.10477789575ல் இலஞ்சம் பணம் போட வேண்டும் என்பது வாய் மொழி உத்தரவு..

இந்த நிலையில் புகார்  அளித்த சமுதாய அமைப்பாளர் ஏ.ரேவதிக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. ந.க.எண்.அ4 (NULM)/1237/2017 அனுப்பியுள்ள குறிப்பாணையில் களப்பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.  22சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் ஆதார் கார்டு விவரங்களை சேகரித்து  ஆன்லைனில் பதிவு செய்யப்படவில்லை மற்றும் 03.06.2018ல் 04.06.2018 ஆகிய இருதினங்கள் பணி தொடர்பான விவரங்களை தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ரேவதி அனுப்பியுள்ள பதிலில் 2016ம் ஆண்டு முதல்  சுமர் 96 மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி பராமரித்து வருகிறேன். மேலும் ஆதார் விபரங்களை வாங்கி ஆன்லைனில் பதிவு செய்துள்ளேன். நான் பணியில் எந்தவிதமான தவறும் செய்யவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

ஆனால், மகளிர் திட்ட இயக்குநர் பி.ஜே. ரேவதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாறுதல் பெற்று  வந்து சுமார்  1 ½ வருடங்கள் ஆகிறது. இந்த 1 ½ வருட பணி காலத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவிடம் மட்டும் மாதந்தோறும் சுமார் ரூ5 இலட்சத்திற்கு மேல் லஞ்சம் வாங்கி வருகிறார் என்று தெரிகிறது. மாதம் குறைந்தபட்சம்  ரூ5 இலட்சம் என கணக்கீட்டால் 18 மாதங்களில் வாங்கிய  இலஞ்சம் ரூ1 கோடியை தாண்டும்..  மாவட்ட திட்ட இயக்குநர் ரேவதி மகளிர்  குழுக்களிடம் உங்களிடம் இலஞ்சம் வாங்கி நானா வைத்துக்கொள்கிறேன். நீங்கள் கொடுக்கும் இலஞ்சத்தில் பெரும்பகுதி சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கு பங்கு கொடுத்து விடுகிறேன் என்று வெளிப்படையாக பேசுகிறார்..

இந்த பிரச்சனைகளை தூண்டி விடுவதாக மகளில் உதவி திட்ட இயக்குநர் சுகுமார் மீது, மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோப்பை அனுப்பினார் மாவட்ட திட்ட இயக்குநர் பி.ஜே.ரேவதி. 12.6.18ம் தேதி மாலை 4மணியளவில் சுகுமார் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். வேறு இடத்திற்கு மாறுதல் உத்தரவு கொடுக்காத காரணத்தால் சுகுமார், சென்னையில்  உயரதிகாரிகளை சந்திக்க சென்றுவிட்டார்…

மாவட்ட திட்ட இயக்குநர் பி.ஜே ரேவதியின் செயல்பாடுகளால் தேசிய நகர் புற வாழ்வாதார இயக்கம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.