11/07/2018

இலங்கையின் வட மாகாணத்துக்கு இந்தியா வழங்கிய ஆம்புலன்ஸ்கள்: வரும் 21-ம் தேதி முதல் இயக்க முடிவு..



இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இந்தியா வழங்கிய ஆம்புலன்ஸ்கள் வரும் 21-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக இலங்கையின் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக இலங்கைக்கு அரசு பயணமாக கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்றார். அப்போது இந்தியாவில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவை இலங்கையிலும் அமல்படுத்த உறுதி அளித்தார். அதன்பேரில் இந்திய அரசு இலங்கைக்கு ரூ.147.81 கோடி நிதி உதவியில் 297 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டன. அதற்கான ஓட்டுநர், முதல் உதவி நிபுணர்கள் என அந்நாட்டு ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கியது.

இந்த ஆம்புலன்ஸ் சேவை இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் முதற்கட்டமாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இத்திட்டம் இலங்கை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதை மேலும் விரிவுபடுத்த இந்திய அரசு ரூ.109 கோடி வழங்க ஒத்துக்கொண்டுள்ளது.

இதற்காக கொழும்பில் கடந்த மே 31-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய நிதி உதவியைப் பெற்று இலங் கை முழுவதும் `சுவசெரிய’ ஆம்புலன்ஸ்கள் இயக்குவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தார். இதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.