08/07/2018

5 மணி நேரத்தில் சுரங்கப்பதை அமைத்து ரயிலை இயக்கி சாதனை.. ரயில்வே துறையில் அதிசயம்...


விசாகப்பட்டிணம் அருகே கொட்டவல்சா மற்றும் பெந்திருத்தி இடையே எண் 484 ரயில்வே இருப்புப்பாதை செல்கிறது. இங்கு நான்கு இருப்புப்பாதை செல்வதால், எப்போதும் ரயில்கள் வந்து செல்லும் பரபரப்பான வழித்தடமாகும். இதனால், இப்பகுதி மக்கள் ரயில்வே இருப்புப்பாதையைக் கடக்க முடியாமல், அவதிப்படுவதும், அடிக்கடி ரயிலில் சிக்கி அடிபட்டு மக்கள் பலியாவதும் தொடர்ந்து வந்தது.

இதையடுத்து இந்தப் பாதையில் சுரங்கப்பாதை அமைக்கக் கடந்த 2017ம் ஆண்டு, ஏப்ரல் 26-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. சுரங்கப்பாதை அமைப்பதற்கான அனைத்துப் பொருட்களும் தயார் செய்யப்பட்ட நிலையில், கடந்த புதன்கிழமை சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, சுரங்கப்பாதை அமைப்பதற்காக 1.5மீட்டர் அகலம் கொண்ட சிமிண்டில் செய்யப்பட்டபலமான 20 அடுக்குகள் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு அடுக்கும், 4.65ஜ்3.65 மீட்டர் உயரம் கொண்டவையாகும். இந்த 20 அடுக்குகளையும் பயன்படுத்தி 4.5மணிநேரத்தில் சுரங்கப்பாதையை ரயில்வே பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

அனைத்து ரயில்களும் சென்றபின், சுரங்கப்பாதை அமைக்க, தொடங்கப்பட்ட பணி அடுத்த சில மணிநேரத்தில் முடிந்து மீண்டும் ரயில் இயக்கப்பட்டதைப் பார்த்து அப்பகுதி மக்கள் வியந்து விட்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.