16/07/2018

புத்தர் மரணித்த பின்பு ஏற்பட்ட குழப்பம்...


யார் இந்த காசியப்பா ?

புத்தர் மற்றும் புத்த மத  சம்பந்தமான கூறப்படாதவைகளை தொகுத்து பார்த்து வருகிறோம்.

அந்த வகையிலான மற்றுமொரு விஷயத்தை பார்போம்.

புத்தர் மரணித்த பின்பே புத்தமதம் உருவானது என்பதற்கான ஆதாரம்.

486 ல் புத்தர் இறந்து விடுகிறார்.
இறந்து சில ஆண்டுகளுக்கு பிறகு முதலாம் புத்த சபை

(first Buddhist council) ராஜ்ஹரா நகரில் கூடியது.

கவனிக்கவும். புத்தர் உயிருடன் இருக்கும் வரை புத்தமஹாசபை என்ற பெயரில் ஒன்றையும் அவர் நடத்தவே இல்லை.

இந்த பிரமாண்ட நிகழ்வுக்கு உலகம் முழுவதிலும் உள்ள புத்தமத அறிஞர்கள் வந்து குவிந்துள்ளனர்.

அதில் மிகவு‌ம் பேச வேண்டிய நபர்
ஞானி காசியப்பா..

இவர் ஜென்புத்த பிரிவில் முக்கியமானவர்.

அங்கே பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பல சலசலப்பு கூச்சல் குழப்பம் நிலவியது.

ஆளாளுக்கு ஒரு கருத்தினை கூறினர்.

காசியப்பா எழுந்து நின்று எல்லாரையும்  அமைதிப்படுத்தி பேச ஆரம்பித்தார்.

புத்தர் கூறியவை அப்படியே தொகுக்கப்பட வேண்டும்..

மனிதர்கள் எப்படி வாழவேண்டும் என்று வாழ்க்கையை கற்றுக்கொடுத்துள்ளார்.

அதன்படி நாம் வாழ்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இங்கே சிலர் புத்தருக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர் அது தவறு.

காரணம் புத்தர் எனது ஞாபகமாக எதையும் வைத்துக்கொள்ள கூடாது என்று கூறுயுள்ளார்.

புத்தருக்கு சிலைவைக்க கூடாது புத்தர் மரணித்து விட்டார் என்றதும்..

சிலர் எழுந்து  எது புத்தமகான் மரணமடைந்து விட்டார் என்று கூறுவது பாவகாரியம்.

அப்படி கூற உங்களுக்கு உரிமையில்லை யாருக்குமே.

என்றவுடன் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது .

புத்தர் மீது அதீத அன்பினால் ஆமா நீங்க கூறுவது சரி புத்தர் சாகவில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

அந்த இடத்தில் தான் பௌத்த மதம் உருவாகிறது.

33 வகையான பௌத்த தத்துவத்தை புதிதாக சேர்த்து புத்தர் என்னிடம் இதை கூறினார் என்று யார் என்ன கூறினார்களோ அவ்வளவையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

33 தத்துவங்களையும்  33 ஏடுகளாக பிரித்து உருவாக்கினார்கள்.

இதில் எதிலுமே உடன்பாடு இல்லாத பலர் சபையை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர்.

ஆனால் ஞானி காசியப்பா சபை ஆரம்பித்து போக்கு சரியில்லாமல் போவதை உணர்ந்த அவர் அன்றே ஒதுங்கி போக ஆரம்பித்தார்.

கடைசி காலம் வரை எதிலுமே சம்பந்தப்படாமல் ஒதுங்கி வாழ்ந்து எங்கு போனார் என்றே
தெரியவில்லை.

சிலர் கடைசிக்காலத்தில் சீனாவில் மரணித்தார் என்று எழுதி வைத்துள்ளனர்.

இது நடந்தது மிகச்சரியாக நூறாண்டுகள் கழித்து வைசாலி நகரில் கூடியது இரண்டாவது பௌத்த மகா சபை அங்கு பெரும் பதற்றம்
ஏற்பட்டது காரணம்..

புத்தம் இரண்டுபட்ட தருணம் அது.

ஹினாஜன புத்தம் hinayana buddihism
மஹாஜன புத்தம்  mahayana buddihism

இப்படி இரண்டு பெரும் பிரிவாக உருவெடுத்தது புத்தம்.

இந்த காலத்தில் போதிதர்மர் பிறக்கிறார்.

பல்வேறு முக்கிய நிகழ்வுகள் பின்னர் நடந்தது அவைகள் எல்லாம் என்ன ?

களைவோம் தற்போது
இனைவோம் மீண்டும்.

புகைப்படம் : ஞானி காசியப்பா

குறிப்பு: சில பிரதேசத்தில் இந்த காசியப்பா புத்தரை விட புனிதமாக மதிக்கப்படுகிறார்.

புத்தருக்கு சிலை கூடாது என்றவருக்கு சிலைவைத்து கோவில் கட்டி வழிபடுகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.