16/07/2018

கருவறை இரகசியம்...


ஒரு மனிதனுக்கு ஜாதகக் கட்டங்கள் எப்பொழுதிலிருந்து தொடங்குகின்றன?

எது வரைக்கும் கட்டங்கள் வேலை செய்யும்?

நாம் உயிரோடு இருக்கும் காலத்தில் தான் கட்டங்கள் நம்மை ஆள்கின்றன என்று சொல்வார்கள்.

ஒரு சிறிய திருத்தம்.

ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜாதகக் கட்டங்கள் அதன் ஆளுமையைத் தொடங்குவதில்லை.

மாறாக ஒரு குழந்தை தனது முதல் மூச்சை உள்ளிழுக்கும் பொழுது தான் குழந்தை கத்துகிறது.

அப்பொழுதிருந்து தான் அதற்கு ஜாதகம் தொடங்குகிறது. சாகும் பொழுது கடைசி மூச்சோடு ஜாதகமும் முடிவுக்கு வருகிறது.

முதல் மூச்சிலிருந்து இறுதி மூச்சு வரை தான் ஜாதகத்தின் ஆளுமை.

ஒரு குழந்தை பிறக்கும் முன்னால் பத்து மாதங்கள் கருவறையில் தங்குகிறது.

அதற்கு உயிருள்ளது ஆனால் மூச்சில்லை.

ஆம். கருவறையில் வளரும் கரு மூச்சே இல்லாமல் தான் உயிரோடு உள்ளது. எப்படி சாத்தியம்?

கருவறையில் வளரும் கருவானது ஒரு திரவத்தை நுரையீரலில் உள்வாங்கி உயிர்வாழ்கிறது.

கருவறையை விட்டு வெளியே வந்தவுடன் தான் முதல் மூச்சை சுவாசிக்கின்றது.

ஜாதகம் கணிப்போர் ஒருவரின் பிறந்த தேதி மற்றும் நேரத்தைக் கேட்பர்.

பிறந்த நேரத்தில் இருந்து தான் ஜாதகம் ஆரம்பிப்பதால் தான் இதனைக் கேட்கிறார்கள்.

ஆனால் சில குழந்தைகள் பிறந்தவுடனேயே அழுவதில்லை.

மருத்துவர்கள் அக்குழந்தையை தலைகீழாகப் பிடித்து தட்டுவதைக் கண்டிருப்பீர்கள்.

பிறப்பதற்கு முன்னால் கருவறையில் திரவத்தை மட்டுமே உள்வாங்கிய நுரையீரல்கள் , குழந்தை பிறந்ததும் மூச்சுக்காற்றை சுவாசிக்கத் தொடங்குகின்றன்.

அத்திரவம் முழுவதும் வெளியேறாத பட்சத்தில் அக்குழந்தை பிறந்தும் அசையாமல் இருக்கும்.

மருத்துவரின் முயற்சிக்குப் பிறகே அத்திரவம் நுரையீரலை விட்டு வெளியேறி , மூச்சக்காற்று உள்ளே நுழைந்து அக்குழந்தை அழத் தொடங்குகிறது.

ஒரு விசயத்தை கூர்ந்து கவனியுங்கள்.

முதல் மூச்சு எடுக்கும் பொழுது தான் ஜாதகம் தொடங்குகின்றது.

பிறப்புக்கு முந்தைய கருவறையிலும் இறப்புக்குப் பிந்தைய கருப்பு நிலையிலும் ஜாதகம் வேலை செய்யாது.

கரு- கருப்பு-கருவறை...

பிறப்புக்குப் முன்னும் வெளிச்சமே இல்லாத கருவறை. இறப்புக்குப் பின்னும் வெளிச்சமே இல்லாத கருப்பு.

ஆக கருப்புக்கு ஜாதகம் வேலை செய்யாது.

இடைப்பட்ட காலத்தில் சூரிய வெளிச்சத்தில் வாழும் நமக்கு மட்டும் தான் ஜாதகத்தின் நன்மை தீமைகள் எல்லாம்.

சரி விசயத்துக்கு வருவோம்.

நம்மை ஆட்டுமந்தையாகத்தான் அரச குடும்பம் நடத்துகிறது. நமக்குத் தான் ஜாதகம், பலன், பரிகாரம் எல்லாம்.

ஆனால் சாத்தன்களும் மனிதர்கள் தானே?

 அவர்கள் மீதும் சூரிய ஒளி படுகிறதே?

அவர்களுக்கு இந்த ஜாதகம் வேலை செய்யாதா?

எப்படி அவர்கள் மட்டும் உச்சத்திலேயே இருக்கிறார்கள்?

இக்கேள்விகளுக்கான விடைகிடைக்க முதலில் கோவில்கள் என்பவை வழிபாட்டிடங்கள் என்ற கருத்தை அடியோடு அழிக்க வேண்டும்.

கோவில்களில் கடவுள் இருப்பதாகச் சொல்லப்படும் அறையின் பெயர் " கருவறை". இதற்கு மேல் தான் சக்திவாய்ந்த கும்பம் இருக்கும்.

ஏன் இவ்வறைக்கு " கருவறை" என்று பெயர் வைத்தார்கள்?

காரணம் இல்லாமலா வைத்தார்கள்?
நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்.

கோவில்கள் என்பவை சாத்தன்கள் வாழும் இல்லங்கள் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரூபணம் ஆகிவிட்டது.

கோவில்களுக்கு முந்தைய பௌத்த விகாரைகளிலும் கருவறை உண்டு, ஜைனக் கோவில்களிலும் கருவறை உண்டு.

அவற்றின் உள்ளே முறையே புத்தனும் ( கடல் சாத்தன் ), மகாவீரனும் ( நிலச் சாத்தன் ) அமர்ந்திருப்பது போன்ற சிலைகள் இருக்கும்.

ஏன் கருவறை என்ற பெயர் வந்தது?

" கருப்புக்கு ஜாதகம் வேலை செய்யாது " இந்தப் பேருண்மை சாத்தன்களுக்குத் தெரியும்.

மனிதன் தான் வாழும் காலத்தில் மூச்சு விடுவதை நிறுத்த முடியாது. கருவறையில் இருக்கும் சிசுவைப்போல திரவத்தையும் சுவாசிக்க முடியாது.

வேறு என்ன செய்யலாம்? ஒரே ஒரு வழி தான்.

கருப்புகளை கும்பாபிஷேகம் என்ற பெயரில் கும்பத்தில் கட்டி , அதற்கு நேராகக் கீழிருக்கும் அறையை வெளிச்சமே போகாத, காற்றே புகமுடியாத " கருவறை" என்று அழைக்கிறார்கள்.

கோவில் கருவறை என்பது கிட்டத்தட்ட ஒரு "வெற்றிடம் " தான். ஆலய நுழைவு என்ற நாடகத்துக்குப் பிறகு தான் கருவறைக்குள்ளே மின் விளக்குகள் , மின் விசிறிகள் எல்லாம் வைக்கப்பட்டு ஒரு வழிபாட்டிடம் போலக் காட்டப்படுகிறது.

நாயக்கர் காலம் வரை இங்கே நம் மண்ணில் பெருங்கோவில்களில் சாத்தன் வாழ்ந்தனர்.

ஆனால் இசுலாமியர்களின் அச்சுறுத்தலால் அவ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஐரோப்பியா போன்ற குளிர் பகுதிகளுக்குச் சென்றாலும் இங்கிருப்பதைப் போல கருவறை வெற்றிடத்தை உருவாக்கும் தொழில் நுட்டபத்தைத் தெரிந்து கொண்ட பிறகு தான் சாத்தன்கள் தமிழகத்தை விட்டு இடம்பெயர்ந்து கிழக்கிந்தியக் கம்பனியாக உருமாறி இங்கே மீண்டும் வந்தார்கள்.

தற்காலத்தில் அவர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் என்ற பெயரில் பூமிக்கு வெளியே ஒரு வெற்றிடத்தில் வாழும் தொழில் நுட்பத்தையும் தெரிந்து கொண்டார்கள்.
வெற்றிடத்தால் மட்டுமே ஜாதகத்தை வெல்ல முடியும்.

வெற்றிடமே சாத்தனின் இருப்பிடம், தமிழ் தான் சாத்தனின் மொழி, தமிழும் சாத்தனும் இணைந்தே இருப்பார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.