12/07/2018

லோக் ஆயுக்தா சட்டம் ஒரு “அட்ட கத்தி” ?? ஏன்? அறப்போர் இயக்கம் செய்தி...


1.வழக்குத் தொடரும் பிரிவு(Prosecution Wing) கிடையாது: பரிந்துரை பணி மட்டுமே  செய்யும்..

முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான ஊழல் புகார்கள் லோக் ஆயுக்தாவால் விசாரிக்கப்பட்டு, போதிய ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தண்டனை வாங்கித் தரும்வரையான பணிகளை லோக் ஆயுக்தா செய்யாது. அதாவது, தமிழக லோக் ஆயுக்தா சட்டத்தில் விசாரணைப்பிரிவு(Inquiry Wing) மட்டுமே உள்ளது வழக்குத்தொடரும் பிரிவு(Prosecution Wing) கிடையாது.  இப்போதுள்ள சட்டப்படி ( CHAPTER 6, பிரிவு 7(a)) , லோக் ஆயுக்தாவின் விசாரணையில் அமைச்சர் ஊழல் செய்திருக்கிறார் என்று தெரியவந்தாலும், அதுகுறித்தான விசாரணை அறிக்கையை முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கும் “பரிந்துரைப்” பணியை மட்டுமே லோக் ஆயுக்தா செய்யும். முதலமைச்சர் மீதான விசாரணை அறிக்கையை(அவர் ஊழல் செய்திருக்கிறார் என்ற ஆதாரங்களோடு) கவர்னருக்கு அனுப்பி வைக்கும். உயரதிகாரிகள் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அது அரசுக்கு(??) அனுப்பி வைக்கப்படும். இந்தப் பரிந்துரை அறிக்கை மீது கவர்னரோ, முதலமைச்சரோ, அரசோ என்ன நடவடிக்கை எடுக்கும், எப்போது நடவடிக்கை எடுக்கும்.? எடுக்காவிட்டால் லோக் ஆயுக்தா என்ன செய்யும் என்ற எந்தக் கேள்விக்கும் நம் சட்டத்தில் பதில் இல்லை. பக்கத்து மாநிலங்களான கர்நாடகா(Chapter 14), கேரளா(Chapter 15) மற்றும் சமீபத்தில்(2015) லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவந்த இமாசலப் பிரதேஷ்(4) போன்ற பல மாநிலங்களின் லோக் ஆயுக்தா சட்டத்தில் வழக்குத் தொடரும் பிரிவு உள்ளது.

விசாரணையில் ஊழல் நடந்திருப்பது உறுதியானால், சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குத்தொடர்ந்து ஊழல்வாதிகளுக்கு தண்டனை வாங்கித்தரும் வரையான நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு அம்மாநிலச் சட்டங்களில் வழிவகை உள்ளது. தமிழக “அட்டக்கத்தி” லோக் ஆயுக்தா சட்டத்தில் இது இல்லை. ஊழல் புகார் மீது விரிவாக விசாரணை நடத்தி மேல் நடவடிக்கைக்காக “பரிந்துரை” அனுப்பும்  ”பெரும்”பணியை மட்டுமே லோக் ஆயுக்தா செய்யும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.