அவற்றை பற்றிய முழு புரிதலன்றி அவை நடந்தேறாது, நடைமுறைப்படுத்தி கண்டாலும் சில குணங்களே வெளிப்படுத்தவல்லது,
வெளிப்படுத்தவியலாத ஒன்று அதிகமிருப்பின் அதுவே இயல்பு. அவை நகலெடுக்கவல்லதன்று
உன் சில இயல்புடன் பொருந்துவோரிடம் பழகு..
பொருந்தாதவற்றை வெறுக்காது விலக்கி வை..
பொருந்துவோரை நம்பாதே அதே சமயத்தில் சந்தேகிக்காதே
உனக்கு தோன்றுவதை உருவாக்கு..
பின்வருவோரை மட்டும் இணைத்துக்கொள்..
உண்மைக் கருத்தியலுக்கு விளம்பரம் தேவையற்றது,
விலகி செல்வோர்க்கு புரியவை, அவ்வாறும் பொருந்தவில்லையெனில்
அவரை விலக்கி, வெறுக்காத பாதையில் கண்டுங் காணாது கடந்து செல்..
உண்மையைத் தேடிப் பொருந்தும் வரும் ஓர் கூட்டம் உன் கருத்தியலை
ஆராய்ந்து ஏற்கும்..
ஏற்று ஏறி வந்தோரிடம் தலைமையற்ற எண்ணத்தை விதை..
ஒரே கருத்தியலில் இயல்பில் முரண்பட்டாலும், கருத்தியலால் ஒன்று சேரும் தன்மையை உருவாக்கு
இயல்பாக பின்வருவோரைக் கண்டு அமைதியாய் கடந்துக் கொண்டே செல்..
நான் உயிரியல் புத்தகத்துல உணர்ந்து நடப்பனவற்றுள் பொருத்தி எழுதியது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.