02/10/2018

பெட்ரோல் விலை உயர்வு, பாஜக மோடியின் டிவீட்டையே போட்டு கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்...


தற்போது உள்ள பிரதமர் மோடி 2012 மே மாதம் 23 ஆம் தேதி குஜராத் முதல்வராக இருந்த போது பதிவு செய்தது:

”கடும் பெட்ரோல் விலை உயர்வு காங்கிரஸ் அரசின் தோல்வியை காட்டுகின்றது” - மோடி

இந்த ட்வீட்டின் இணைப்பு

https://twitter.com/narendramodi/status/205314848064679938 (இந்த செய்தி வெளியிடும் வரை இந்த இணைப்பு உள்ளது)

மோடி அவர்கள் இந்த ட்வீட்டை போடும் நேரத்தில் அப்போது குருட் ஆயில் விலை 111 டாலர். பெட்ரோல் விலை 73 ரூபாய்.

தற்போது குருட் ஆயில் விலை 67 டாலர் , பெட்ரோல் விலை 83+ ரூபாய்

கிட்ட தட்ட 2012 ஆம் ஆண்டை விட தற்போது குருட் ஆயில் விலை பாதி குறைந்துள்ளது.

அப்படி எனில் 2012 உடன் ஒப்பிடும் போது பாதி விலை அதாவது 35-40 ரூபாய் தான் பெட்ரோல் இருக்க வேண்டும்.

73 ரூபாய்க்கு விற்றதே பிரதமர் மோடியின் பார்வையில் அரசின் தோல்வி என்றால் , 35-40 ரூபாய்க்கு (குருட் ஆயில் விலை படி) விற்க வேண்டிய பெட்ரோலை 83 ரூபாய்க்கு விற்கும் மோடி அரசின் செயல்பாட்டை என்ன சொல்வது என நெட்டிசன்களின் கேள்விக்கு பதில் கிடைக்குமா ?

குறிப்பு : 2012 ல் டாலரின் மதிப்பு 52 ரூபாய், தற்போது 72 ரூபாய். 52 ரூபாய்க்கு இருந்த டாலர் மதிப்பை தற்போது 72 ரூபாய்க்கு கொண்டு வந்தது நாட்டு மக்களின் தவறு அல்ல நாட்டை ஆள்பவர்களின் தவறு!. இந்த அளவிற்கு நம் இந்திய நாட்டின் பணத்தின் மதிப்பை குறைத்துள்ளார்கள் என்பது கூடுதல் தோல்வி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.