02/10/2018

பாம்பாட்டிச் சித்தர் பாடல்...


வேதப்பொருளின்ன தென்று வேதங் கடநத
மெய்ப்பொருளைக் கண்டுமனம் மேவிவிளம்பிப்
போதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
பூரணசற் குருதாள் கண்டாடாய் பாம்பே

பொருள்...

வேதத்தின் பொருள் என்ன என்ன என்பதை வேதத்திற்கும் அப்பாற்பட்டு நின்ற மெய்ப்பொருளைக் கண்டு மனதினை ஆய்ந்து உரைத்து அறிவாய் நின்ற பொருள் இதுதான் என்று அறிவுறுத்தும் முழுமை பெற்ற நல்லாசிரியரின் அடிபணிந்து ஆடுவாய் பாம்பே

நாதவெளி என்பது வேதம்.. உரைப்பதாகக் கூறப்படும் நிலை, நாதத்தையும் கடந்து நிற்கும் சுத்த வெளி நிலை ஆதி நிலை. இவ்வாதி நிலையில் அறிவும் அன்புமாகி முற்றுணர்ந்த நிலை இந்நிலையை அடைவதை உரைக்கும் ஆசிரியரைப் பணிக என்பது விளக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.