09/10/2018

துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டது: தமிழக ஆளுநர் பேச்சு...


சென்னை: தமிழகத்தில் துணைவேந்தர் பதவிக்கான நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் இன்று நடைபெற்ற உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், பல கோடி ரூபாய் பரிமாற்றத்தால் நியமனம் நடைபெற்றதாக தெரிய வந்தது. முதலில் நான் அதை நம்பவில்லை.

ஆனால், தமிழகத்தில் துணைவேந்தர் பதவிக்கான நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டது. துணை வேந்தர் பதவிக்காக பணம் புரண்டது கண்டு வருத்தமடைந்தேன். துணைவேந்தர் நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும். எனவே, துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்தைக் கண்டு, அதனை மாற்ற நினைத்தேன். இதுவரை 9 துணைவேந்தர்களை தகுதியின் அடிப்படையில் நியமித்துள்ளேன்.

மேலும், பல கோடி ரூபாய் பணம் கொடுத்து துணை வேந்தர் பதவி வாங்கப்பட்டிருக்கிறது என்று பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக ஏராளமான புகார்கள் எழுந்த நிலையில், தமிழக ஆளுநர் இன்று அதனை பட்டவர்த்தனமாக வெளி உலகுக்குத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.