14/11/2018

2010 திமுக ஆட்சியிலிருந்து கிடப்பில் கிடக்கும் இலவச டிவிக்கள்...


திருப்பூரில் உள்ள அரசுப் பள்ளியில், 8 ஆண்டுகளாக அரசு வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகள் விநியோகிக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், மாணவிகள் வகுப்பறைக்கு வெளியே வெயிலில் படிக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது.  திருப்பூரில் ஈஸ்வரன் கோவில் வீதியில் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் இடவசதி பற்றாக்குறை காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு, 30 அறைகள் கொண்ட கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டன. இவற்றை பயன்பாட்டுக்கு விடுவதற்கு முன்பு, அப்போதைய திமுக ஆட்சியில், இலவச தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டன.

இதனால், கீழ் தளத்தில் உள்ள 6 அறைகள் மூடி சீல் வைக்கப்பட்டன. தற்போதையை அரசு, இதை விநியோகம் செய்யாததால், தொலைக்காட்சிப் பெட்டி வீணாவதுடன், மாணவிகளின் நலன் கருதி கட்டப்பட்ட வகுப்பறைகளும் பயனற்று கிடக்கின்றன. இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளியில் போதிய வகுப்பறைகள் இன்றி வராந்தா மற்றும் மரத்தடிகளில் பாடம் நடத்தும் நிலை நீடிக்கிறது. எனவே, பூட்டிக் கிடக்கும் அறைகளை திறந்து, மாணவிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பெரும்பான்மையான பள்ளிகளில் இடவசதி இருந்தும் போதிய கட்டடங்கள் இருப்பதில்லை.ஆனால், புதிதாக கட்டப்பட்ட கட்டடம் 8 ஆண்டுகளாக பூட்டிக் கிடப்பதுடன், என்ன நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அதற்கும் பயன்படாமல் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.