02/11/2018

3 குழந்தைகள் பெற்றால் இலவச நிலம்.. தம்பதிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்…


இத்தாலி நாட்டில் நாளுக்கு நாள் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு வெறும் 4 லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். 

அங்குள்ளவர்கள் திருமண பந்தத்தில் சிக்காமல் சேர்ந்து வாழ்வதையே பெரிதும் விரும்பகின்றனர். 

அவர்கள் குழந்தை பெற்று கொள்வதை விரும்புவதில்லை. மேலும் 2 குழந்தைக்கு மேல் பெற்று கொள்வதில்லை.  இதனால் வயதானவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர்.

இதனால் இத்தாலியில் குழந்தை பிறப்பை அதிகரிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி 3 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொண்டால் அவர்களுக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இத்தாலியில் அரசுக்கு சொந்தமாக 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டே இந்த திட்டத்தை இத்தாலி அரசு அறிவித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.