26/11/2018

தமிழினத் தலைவர் அண்ணன் மேதகு வே. பிரபாகரனின் சிந்தனையிலிருந்து...


விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை.

இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு.

ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக் கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்..

எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள்..

கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்..

தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல..

அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்று தான் சொல்வேன்..

இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்து வரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்று தான் அழைக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.