29/12/2018

3ம் உலகப் போருக்கு தயார் - ரஷ்யா...


நாங்கள் எதற்கும் தயார் என்பது போல தன் நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகனையினை சோதித்து உலகை அதிர வைத்திருக்கின்றது ரஷ்யா...

ஏவுகனை என்பது ஹிட்லரின் கனவு, வான் பிரவுண் தலமையில் ஒரு குழுவினையும் இன்னொரு விஞ்ஞானி தலமையில் இன்னொரு குழுவினையும் வைத்து தன் ஏவுகனை திட்டங்களை செய்தார் ஹிட்லர்.

பறக்கும் குண்டு என சிலவற்றை செய்து லண்டனை தாக்கி மிரட்டினார், அதற்குள் காலம் முடிந்தது.!தலைமறைவு ஆனார்.

நாசிக்களை வீழ்த்துகின்றோம் என உள்ளே புகுந்த ரஷ்யாவும் அமெரிக்காவும் ஆளாளுக்கு ஒரு குழுவினை தன்வசம் இழுத்து சென்றன‌.

அடுத்து என்ன.?

இருவரும் ஏவுகனைகளாக செய்தார்கள், ராக்கெட்டாக செய்து வானுக்கும் சென்றார்கள், ஹிட்லரின் நுட்பத்தை திருடி இருவருமே ஏவுகனை , ராக்கெட் நுட்பத்தில் சமபலத்தில் இருந்தார்கள்.

அமெரிக்கா வான் பிரவுனால் ஏவுகனை பலம் பெற்றது, ரஷ்யா அதை சொல்லவில்லை எல்லோரும் தோழர்கள் என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருந்தது.

அமெரிக்காவின் ஏவுகனை பலம் அபாரமானது ஆனால் ரஷ்யா பக்கம் கொஞ்சம் கூடுதல் பலம்.

ஆம் ஹிட்லரின் எந்த கும்பலை ரஷ்யா தன் வசம் கொண்டு சென்றார்களோ அவர்கள்  ஏவுகனை , ராக்கெட் விவகாரங்களில் மேதாவிகள்.

குருயீஸ், பாலிஸ்டிக், டார்பிடோ, சூப்பர்சானிக் என பல ஏவுகனை வகைகளில் அமெரிக்கா சரிக்கு சரி நின்றாலும் இன்றைய செய்தி அதிர வைக்கின்றது.

இன்றைய நிலையில் மகா வேக ஏவுகனை இதுதான், ஏவுகனை எதிர்ப்பு சிஸ்டம் இதனை தடுப்பது சுலபமல்ல‌.

காரணம் இந்த வேகத்தில் எதிர்ப்பு ஏவுகனை வந்தால் மட்டுமே அது சாத்தியம் என்பதால், இது இன்று மிகபெரும் ஆயுதமாகின்றது..

அதையும் மீறி வரும் எதிர்ப்பு ஏவுகனைகளை திசைமாற்றிவிடும் நுட்பமும் இருக்கின்றது என்கின்றது ரஷ்யா..

ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.