25/12/2018

கணினியை கண்காணிக்கும் மத்திய அரசின் ஆணைக்கு எதிராக வழக்கு...


நாட்டில் உள்ள அனைத்து கணினிகளின் செயல்பாடுகள் மற்றும் கைப்பேசி உரையாடல்களை கண்காணிக்கவும் தகவல் பரிமாற்றத்தை உளவு பார்த்து அதனை இடைமறிக்கவும் மத்திய அரசின் 10 உளவு அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் வழங்கி கடந்த டிச.,20ம் தேதி அறிக்கை வெளியிட்டது.

இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என
பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கணினிகளை கண்காணிக்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

வழக்கு விவரம்:

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை கண்காணிக்கவும், சமூக சிந்தனையாளர்களின் கருத்துகளை கண்டறிந்து அவர்களை ஒடுக்கவதற்காகவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் இந்த சர்வாதிகார போக்கு, நாட்டு மக்களுக்கு இழைக்கும் ஜனநாயக படுகொலையாகும். ஆகவே, இது குறித்து வெளியிட்ட அறிக்கை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.