18/12/2018

மனிதன்...


ஒரு உண்மையான மனிதன்,
ஒரு போதும் நம்புவதில்லை...
அவன் கற்கிறான்.

ஒரு உண்மையான மனிதன்,
ஒரு போதும் எல்லாம் தெரிந்தவனாக ஆகிவிடுவதில்லை...
அவன் எப்போதும் வெளிப்படையாக இருக்கிறான்.

நம்புகிறவன்,
அவனுக்குத் தகுந்தாற் போல்...
உண்மையை ஒத்துப்போகச்
செய்ய நினைக்கிறான்...

தேடுகிறவன்,
உண்மைக்குத் தகுந்தாற்போல்...
 தன்னை மாற்றிக் கொள்கிறான்...

உண்மையான மனிதன்,
கடைசி வரை வளர்கிறான்...
அவன் இறக்கும்போது கூட
வளர்ந்து கொண்டிருக்கிறான்...

அவனுடைய வாழ்வின்
கடைசிக் கணம் கூட...
விசாரித்தாலாக இருக்கும்...
தேடலாக இருக்கும்...
கற்றலாக இருக்கும்...

ஒருவனின்,
சுய பரிசோதனையே...

அவனின்,
அனுபவம், அகநிலை மாற்றம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.