14/12/2018

பயம்...


பயத்தை பற்றி  சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்  தன் உயிரின் நிலையை வாழும் காலத்தில்  உணராமல் - இந்த உயிர் பிரிந்து விடுமோ என்ற பயம் தான் அடிப்படையான உண்மை ஆகும்.

பயத்தை பற்றி புரிந்து கொள்ள  தனிமையில் தினமும் சில நேரங்களில்  இருந்து பழகினால் சாத்தியம் - இது போக போக யார் கூட இருந்தாலும் இல்லா விட்டாலும் தனித்துவமாக இருந்து வாழும் தன்மை - நம்மை உணரும்  சந்தோசத்தின் மூலம்  நம்முள் நாம் காண முடியும்.

சதா எல்லா நேரங்களிலும் தியானத்தன்மையில்  இருப்பவருக்கு பயம் ஒரு பொருட்டாக தெரிவதில்லை.

ஒவ்வோரு பயமும் இந்த உயிர் பிரபஞ்சத்தில் - உடல் மூலம் பிறப்பு  எடுத்து அதன் நோக்கம் என்ன என்ற அடிப்படையை உணராத தருணங்களில் வருவது தான் பயம்.

நிரம்பிய ஆசைகளின் குப்பைகள் கரைத்து தன்னுள் இருக்கும் இயற்கையை உணர கொடுத்த வாய்ப்புகள் இழக்கும் இடங்களில் வருவது பயம்.

ஏனெனில் ஒவ்வொரு நொடியிலும் இயற்கை தன்னை உணரவே - ஒவ்வொரு சூழலிலும் உண்மையை உணர்த்தவே வடிவமைத்து உள்ளது -அதை சற்று ஆழமாக புரிந்து கொள்ளாத நிலை உணர்வே பயம்.

எங்கெல்லாம் பயம் வருகின்றதோ அங்கெல்லாம் உயிரின் நிலையை உணரவில்லை என்று புரிந்து கொள்ள முடியும்.

தன் உணர்வாக இயங்கும் உயிரின் நிலையை எங்கெல்லாம் ஆழமாக உணர்கிறதோ அங்கு பயம் கரைந்து விடுகிறது.

ஒவ்வொரு பயத்துக்கு பின்னால் ஒழிந்து இருப்பது மரண பயம் தான் - நாம் பயத்தை வேறு படுத்தி பார்க்கிறோம்  ஆனால் அதன் அடி ஆழத்தில் இருப்பது மரண பயம் தான் என்று சற்று ஆழமாக செல்லும் பொழுது உணர முடியும்.

பொதுவாக தேக்கமாக  இருக்கும் ஆசைகள் செயல் படுத்தி அனுபவிக்க முடியாத சூழ்நிலைகள் வரும் பொழுது அங்கு கவலை தோன்றி அதன் சக்தி இழப்பு தான் பயமாக மலர்கின்றது.

உதாரணம் மூலம் புரிந்து கொள்ளலாம்...

இந்த பயமானது பொருள்கள் மீதும், நபர்கள் மீதும், எதிர்கால கற்பனை வாழ்க்கை கொண்ட பற்றின்  அடிப்படையில் - இவைகளை ஒட்டியே அதிகம் வருகின்றது.

ஒரு நபர் மீது பாசம் என்பதை காட்டி பயத்துக்குரிய தீனி போட்டு , வெளியே சென்றால் போயிட்டியா வந்துட்டியா என்ற பாங்கு படுத்தும் பேரில் பயத்தை உருவாக்கி கொள்வது.

வாகனத்தை ஒட்டி சென்றால் ஏதாவது accident ஆகி விடுமோ என்ற பேதியில் வரும் உணர்வுகள்.

மிருகங்கள் கடித்து விடுமோ கொன்று விடுமோ என்ற பயங்கள்.

பக்கத்து வீட்டில் ஏற்படும் மரணம் மூலம் வரும்  பயம்.

ரத்தக் கசிவுகளை பார்க்கும் பொழுது வரும் பயம்.

வீட்டுக்கு உள்ளே சின்ன ஒரு sound கேட்டால் வரும் பயம்.

Machineries இயக்கும் பொழுது வரும் பயங்கள்.

வருங்கால சேமிப்பை பற்றிய பயம்.

குழந்தைகளை சேர்க்கும் hi fi schools பற்றிய பயம்.

ஒவ்வொரு நபருடன் ஒப்பீடு செய்து அதன் படி நாம் இன்னும் முன்னேற வில்லை என்ற பயம்.

உடல் வலிகள், நோய்கள் கொண்ட பயம்.

தனிமையில் இருக்கும் பொழுது பயம்.

தேர்வு எழுத பயம்.

வேளைகளில் - தொழில்களில்  முன்னேற வில்லை என்ற பயம்.

பொண்டாட்டி - புருஷன் வேறு உறவுகள் இருக்குமோ என்ற சந்தேகம் கொண்ட பயம்.

என சொல்லிக் கொண்டே போகலாம்..

தன் வயது வந்த மகன் - மகள் கெட்டு விடுவார்கள் என்ற பயம்.

அதிக நேரம் மொபைல் use பண்ணும் பொழுது ஏற்படும் சந்தேகம் கொண்ட பயம்.

நெருங்கிய உறவுகள் பிரிந்து சென்று விடுவார்கள் என்ற பயம்.

சடங்கு சம்பிரதாய முறைகளை கொண்டு இதை செய்யாமல் விட்டால் அப்படி நடந்து விடுமோ இப்படி நடந்து விடுமோ என்று வரும் முட்டாள் தனமான பயம்.

இவர் இப்படி நினைத்து விடுவாரோ அவர் அப்படி நினைத்து விடுவாரோ என தன்மேல் நம்பிக்கை இல்லாத முட்டாள் பயம்.

வசதியான ஆட்கள் பெரிய பதவிகள் அரசியல் வாதிகள் கொண்ட நபர்கள் முன் ஏற்படும் உயர்வு - தாழ்வை கொண்ட பயம்.

இவை அனைத்துமே கடந்த கால சுமைகளை - தேக்கம் கொண்ட ஆசைகளையும் சுமந்து அடுத்த நாள் அடுத்த வருஷம் - அடுத்த generation வரை நடக்க வேண்டும் என்று தீர்மானத்து விட்டு செயல்பட வில்லை என்ற ஏற்றுக்கொள்ள தெரியாத மனோ நிலையே பயத்துக்குரிய மூலம் ஆகும்.

ஏன் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை பிடிப்புகளை மனதில்  சுமக்கும் பொழுது அங்கு வேறுபாடு கொண்ட சூழ்நிலைகள் நிகழும்  பொழுது அங்கு கவலையும் அதனுள் இருக்கும் பயமும் எழுகிறது.

இங்கு அவரவர் குணத்தை வைத்து அவரவர் ஒப்பீட்டு கொண்டே இருப்பது தான் எதையும் இயல்பாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

முதலில் பயத்துடன் வாழ வேண்டும்..

பயம் வந்தால் என்ன உடல்  ரசாயன மாற்றம் நிகழ்கிறது.

அடிவயிற்றில் கிங்க் காங் trailer ஓடுகிறது , சில சமையங்களில் பேதி ஆகி விடுகிறது , நெஞ்சில் படபடப்பு, உடல் நடுக்கம், பேச்சு குளறுபடிகள் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த ரசாயன மாற்றம் உள் நிலைக்கு பொருந்தாமல் செயல்படும் நிலையை உணர முடியும்.

முதலில் ஒவ்வொரு பயத்துடன் வாழ வேண்டும் ஏன் பயம் வந்தது.

அதன் வேர் எங்கு உள்ளது அது வருவதுக்கு காரணம் என்ன ?

பயம் வரும் சூழலில் அங்கு நாம் இன்னும் அந்த இடத்தில் உண்மையை உணரவில்லை என்பதை சற்று ஆழமாக கவனிக்க கூடிய விஷயம்.

எங்கும் எதிலும் நான் அடிப்படையான உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற தீர்க்கமான பார்வை ஆரம்ப கால கட்டங்களில் பயத்தைக் கொண்டவர்கள் தனக்குள் உறுதியான நிலை பாட்டில் இருக்க வேண்டும்.

தினசரி தியானம் செய்ய செய்ய நம்மமுள் நாம் ஆழ்ந்து செல்ல முடியும் அப்படி ஆழமாக செல்லும் பொழுது தன்னிலை அறிந்து கொள்ள முடியும்.

இப்படி நம்மை உணர உணர நீ நீயாக வாழ தொடங்கி விடுவாய்.

அங்கு யார் என்ன சொன்னாலும்  சொல்லாமல் காண்பிக்கிற செயல் உணர்வுகளில் - அதில் இருக்கும் உண்மை என்ன என்பதை எளிதில் உணர்ந்து அதில் ஒன்னும் இல்லை..

அவர்கள் உண்மையை உணராமல் செய்கின்றனர் - அதை நமக்கு திணிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அது போல அடிப்படையில் இந்த பயம் மூலம் சில வந்த நோக்கத்தில் முழுமை அடையாத அடிப்படையை உணர முடியாத காரணம்  அதர்க்கு பல பிடிப்புகளை சுமப்பது தான் காரணம் என்ற   உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

அந்த நிலை வரும் பொழுது ஒவ்வொரு விஷயத்தையும் செயலையும் நுட்பமாக கவனிக்கும் திறன் அதில் இருக்கும் உண்மைகள் உணர்ந்து தனித்துவமான தன்மை பெற்றுக்கொண்டே நம் உயிர் பயணிக்கும்.

இந்த நிலை வரும் பொழுது பெரும்பாலன பயம் காணாமல் உடைந்து போய் விடுகிறது.

வாழ்க்கை தைரியம் - பயம் கடந்த இயல்பில் மலர தொடங்கி விடும்.

தியானம் செய்வோம் உண்மையை உணர்வோம் - இயல்பில் பயத்தைக் கடப்போம்.

உயிரின் நிலைகளை முழுமையாக உணரும் பொழுது அங்கு மரணத்தை கொண்ட பயம் கடந்த நிலை வரும்.

அங்கு மரணம் இல்லாத பெரு வாழ்வை ஞானிகள் பெற்றதை  பெற முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.