14/01/2019

பாச பந்தங்கள் வெறும் இராசயனங்களே...


மனிதனிடம், பாசபந்தம், சக மனிதனை நம்புவது, தாய்ப்பாசம், இணைபிரியாமல் நீண்டநாள் தம்பதியர்களாய் வாழ்வது போன்ற சிறப்பான குணங்கள் காணப்படுகின்றன.

இவை அனைத்தும் ஆக்சிடோசின் என்ற நரம்பு செல்களைத் தூண்டி செயல்படுத்தும் சிறிய பெப்டைடு பொருளால் நிகழ்கிறது. சாதாரணமாக இது உடலில் மிகக் குறைவாகவே இருந்தாலும், பாலூட்டும் தாயிடம் அதிகம் காணப்படும்.

ஆக்சிடோசினை உடலில் உற்பத்தியாகாமல் தடுக்க முடியும். அப்படித் தடுத்தால் மனிதரிடம் ஒட்டுறவு குறைந்துவிடும்.

பறவைகளிடம் ஆக்சிடோசினைப் போலவே மீசோடோசின் என்று ஒரு பொருள் மூளையில் காணப்படுகிறது.

கூட்டமாக சகோதரப் பாசத்துடன் வாழ்வதற்கு மீசோடோசின் தேவை. மீசோடோசினை உற்பத்தியாகமல் தடுத்துவிட்டால் குறிப்பிட்ட பறவையானது சொந்தங்களிடமிருந்து பிரிந்து வேறு கூட்டத்தில் சேர்ந்துவிடுகிறது.

இதை சீ(ஸீ)ப்ரா ஃபிஞ்ச் என்ற பறவைகளை வைத்து நிரூபித்திருக்கிறார்கள்.

ஆக்சிடோசினுக்கு முந்தித் தோன்றியது மீசோடோசினாக இருக்கலாம் என்றும்; இது மீன் போன்ற வாயில் தாடை வத்திருக்கும் ௦.

உயிரினங்கள் தோன்றியபோதே கிட்டத்தட்ட 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, உயிரினங்களில் தோன்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதை இன்டியானா பல்கலைக்கழக நரம்பியல் வல்லுநர் ஒருவர் தெரிவிக்கிறார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.