08/01/2019

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மனிதனின் செயலா? இறை சக்தியின் அருளா?


சாதாரணமாக மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது கண்டுபிடிப்புகள் தனி மனிதனால் நிகழ்த்தப்பட்ட அற்புதமாக தான் தோன்றுகிறது.

ஆனால் உண்மை வேறுவிதமாக தான் இருந்திருக்கிறது.

மேடம் கியூரி தன் சுயசரிதையில் இதை தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

அவர் ஒரு கண்டுபிடிப்பை பற்றிய குறிப்பை பாதி எழுதியிருந்த நிலையில் மேற்கொண்டு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. அவர் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. நள்ளிரவை கடந்த நிலையில் அந்த குறிப்பை மேஜைமீது வைத்துவிட்டு தூங்க சென்றுவிட்டார்.

காலை எழுந்து பார்த்தபோது மீதி குறிப்புகள் நிறைவு செய்யப்பட்டிருந்தன.

அவருக்கு ஆச்சரியமாக போனது. அவர் வீட்டு பணியாளர்கள் அவ்வளவு படித்தவர்கள் கிடையாது. ஜன்னலும் கதவுகளும் நன்றாக தாளிடப்பட்டுதானிருந்தன.

பரம்பொருளின்மீது அவருக்கு நம்பிக்கையில்லை. அடுத்து அவர் நன்றாக கவனித்தபோது தான் தெரிந்தது மீதி எழுதப்பட்டிருந்த கையெழுத்துகளும் அவருடையதே என.

நன்றாக யோசித்து பார்த்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் அவருக்கு அதற்கான விடைகள் தோன்ற அரைதூக்கத்தில் தானே அதை எழுதியதை உணர்ந்துகொண்டார்.

அன்றிலிருந்து சரிசெய்யமுடியாத குறிப்புகளை அரைதூக்கத்தில் சரி செய்வதை வழக்கமாக்கிகொண்டாராம்.

ஆர்க்கிமிடிஸ் அவர்களுக்கு ஒரு கட்டளை மன்னரிடமிருந்து வந்தது. மன்னருக்கு பரிசாக வந்த தங்க ஆபரணத்தில் கலப்படமிருக்கிறதா என்பது தான் கட்டளை.

ஆர்கிமிடிஸ் எவ்வளவோ மூளையை குடைந்து பார்த்தார் விடை கிடைக்கவில்லை. மன்னர் ராஜதுரோக குற்றம் சுமத்திவிடுவாரோ என்ற பயம் வேறு.

ஒருநாள் தண்ணீர் தொட்டியில் முங்கி குளித்துகொண்டிருக்கும்போது திடீரென மின்னலென அதற்கான விடை கிடைத்தது.

அவர் நிர்வாணமாக அரசவையை நோக்கி ஓட ஆரம்பித்து விட்டார்.

வழிபோக்கர்கள் அவரை நிறுத்தினர். அவரோ ''விடை கிடைத்து விட்டது. விடை கிடைத்து விட்டது'' என சொல்லிக்கொண்டே இருந்தார்.

மக்கள் ஒருவழியாக அவரை சுயநினைவிற்கு கொண்டு வந்தனர்.

இவரைப் போலவே தான் எடிசன் ஐன்ஸ்டீன் எடிங்க்டன் மேக்ஸ்ப்ளார்க் போன்ற மிகப் பெரிய விஞ்ஞானிகளின் வாழ்விலும் அதிசயம் நடந்ததாக அவர்களே கூறியிருக்கிறார்கள்.

வேதங்கள் மனிதனால் இயற்றப்பட்டவையல்ல என சொல்வதில் உண்மையில்லாமலில்லை.

குரான் முகமதுவால் பிறந்ததும் அப்படி தான், பைபிள் இயேசுவிடம் பிறந்ததும் அப்படிதான்.

எப்படி இது சாத்தியமென ஆராய்ச்சி செய்யும்போது மேடம்கியூரிக்கும் ஆர்க்கிமிடிசுக்கும் வேதத்தை இயற்றியவர்களுக்கும் முகமதுவுக்கும் இயேசுக்கும் நடந்தது ஒன்றே ஒன்று தான். அவர்கள் அந்த சமயங்களில் "தான்'' என்பதை இழந்தது தான்.

தன் சுயத்தை தன் அகங்காரத்தை இழக்கும் நிலை வரும்போது இயற்கையோடும் ஈஸ்வர தன்மையோடும், பரம் பொருளோடும் ஐக்கியமாகி போகிறார்கள்.

எண்ணங்களற்ற தியானநிலை கைகூடுகிறபோது உள்ளுணர்வு பிரம்மத்தோடு கலந்துவிடுகிறது.

வெளியுணர்வு நிலையில் கிடைக்காத விடைகள் பரமாத்மாவோடு கலந்த தன் உணர்வற்ற நிலையில் தானாக தோன்றி விடுகின்றன.

உலகில் இசை வல்லுனர்களாக இருக்கட்டும், விஞ்ஞானிகள் ஓவியர்கள் ஞானிகள் என யாராக இருந்தாலும் புதியதை படைக்கும்போது சத்திய ஜோதியின் சில கிரணங்கள் தங்கள் மீது பாய்ந்ததால் சாதித்தவர்களே.

சத்தியத்தின்மீது அவர்கள் கொண்டிருந்த இச்சையே இந்த செயல்களுக்கு அவர்கள் கர்த்தாவாகி போனார்கள்.

ஒரு நானூறு ஆண்டுகளாக விஞ்ஞானிகள் தான் என்ற விதத்திலே சாதனையாக தன் கண்டுபிடிப்புகளை பறைசாற்றிக்கொண்டார்கள்.

ஆனால் தற்போது ஐம்பது ஆண்டுகளாக எல்லா விஞ்ஞானிகளும் தான் என்பதை விடுத்து இயற்கையின் சாகசத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

முற்காலத்தில் ரிஷிகளும் ஆத்ம ஞானிகளும் எல்லாவற்றையும் கண்டுபிடித்திருந்தார்கள்.

அவர்கள் யாரும் தங்கள் சாதனையென எதனையும் பறைசாற்றி கொள்ளவில்லை.

ஒருவனின் சமர்ப்பணத்தினாலும் பிரம்மத்தின் ஒருங்கிணைப்பினாலும் இன்னும் நிறைய கண்டுபிடிப்புகள் தோன்றக்கூடும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.