05/01/2019

ஒரே ஒரு மாணவி.. ஆசிரியைக்காக இயங்கும் பள்ளி.. தனியார் போட்டியால் மூடப்படும் அபாயம்...


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பெரிய ஜோகிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1956-ல் கட்டப்பட்ட இப்பள்ளியில், ஜோகிப்பட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.

கடந்த ஆண்டு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால் நடப்பாண்டில் இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டுமே படித்து வருகிறார். 4-ம் வகுப்பு படிக்கும் அவருக்கு பாடம் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் யாரும் கிடையாது.

ஒரு மாணவிக்காக தலைமை ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். அதேபோல் சத்துணவு ஊழியர் ஒருவரும் உள்ளார். தற்போதைய நிலையில், இந்த 3 பேருக்காகவே பள்ளி இயங்கி வருகிறது.

இதுதொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ரேகா கூறுகையில் தனியார் பள்ளி மோகத்தால் கிராமத்தில் உள்ள மாணவர்களும் அங்கு சென்று விட்டனர். கிராம மக்களை ஒருங்கிணைத்து மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியும் பெற்றோர் புறக்கணித்து விட்டனர் என்று கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.