29/01/2019

கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள்...


நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் உயிர்ச்சத்து ஏ மற்றும் உயிர்ச்சத்து சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் உயிர்ச்சத்து பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

பச்சைக் காய்கறிகளுடன் நறுக்கப்பட்ட காய்கள், பழங்கள் முதலானவை கொண்டு பச்சையாக உண்ணும் ஒரு வகை உணவு salad மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.

உயிர்ச்சத்து ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது.

உயிர்ச்சத்து ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். கேரட்டில் அதிகமான உயிர்ச்சத்து ஏ உள்ளது.

உயிர்ச்சத்து ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் உயிர்ச்சத்து ஏ உள்ளது.

தக்காளி, பசலை, ஈரல், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.

உடலில் அதிகமாக சுரக்கும் கொடுடி முந்திரிப் பழச் சர்க்கரையினால் (glucose) கண்வில்லை (eye lens) சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன.

இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன.

அரிசி, பட்டாணி, போஞ்சி, அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.