06/02/2019

சின்னதம்பி யானையை காக்க அனைவரும் முதலமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பவும்...



To
முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை - E-Mail : cmcell@tn.gov.in

Principal Chief Conservator of Forests (Head of Forest Force)
Email: tnforest@tn.nic.in

பொருள்: சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் முடிவைக் கைவிடக்கோரி

வணக்கம்

சில தினங்களுக்கு முன் கோயம்புத்தூரில் பேசிய வனத்துறை அமைச்சர் கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரியும் "சின்னத்தம்பி" என்ற யானையை காட்டுக்குள் விரட்ட முடியாததால் அதை கூண்டில் அடைத்து கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் யானைகளுக்கு மொத்தம் 101 வழித்தடங்கள் உள்ளன, இந்த பாதைகள் அனைத்தும் மறிக்கப்பட்டு வீடுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதனால்தான் யானைகள் ஊருக்குள் வந்து விடுகிறது. வழித்தடங்களை ஆக்கிரமித்தவர்கள் அவர்களாகவே பார்த்து திருந்த வேண்டும் என்றார். அமைச்சரின் இந்த பேச்சு முற்றிலும் காட்டின் பேருயிரான யானையின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.

யானை என்பது ஒரு தனி உயிர் அல்ல. காட்டின் ஒட்டுமொத்த வளத்தின் குறியீடு. மேலும் யானையை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவதன் மூலம் அப்பிரச்னையைத்தான் இடமாற்றம் செய்ய முடியுமே தவிர நிரந்தர தீர்வாக அமையாது. சின்னத்தம்பி இடமாற்றம் கூட அதைத்தான் உறுதி செய்கிறது. மேலும் சுதந்திரமாக சுற்றித்திரிந்த யானையைப் பிடித்து கூண்டில் அடைத்து அடிமைப்படுத்துவதென்பது பிற உயிரினங்கள் மீது மனிதன் தொடுக்கும் மிகப்பெரும் வன்முறை. யானையின் நினைவுகளில் காடு எப்போதும் நிலைத்திருக்கும். தப்பிக்கும் வாய்ப்பு அமைந்தால் அவை மீண்டும் காட்டை நோக்கியே நடைபோடத் தொடங்கும் என்பதும் நிரூபணமாகிருக்கிறது.

அதுமட்டுமின்றி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில் சின்னத்தம்பி போன்ற வீரியமிக்க இளம் வயது யானையை கும்கியாக மாற்றுவது காட்டில் யானைகளின் இனப்பெருக்கத்தை பாதித்து யானைகளின் எண்ணிக்கை குறைவதற்கு வழவகுக்கும். சின்னத்தம்பி யானைக்கு ஏற்கெனவே அதன் இருப்பிடத்தை அறிந்து கொள்வதற்கான கருவி பொருத்தப்பட்டுள்ளது அதன்மூலம் அது கிராமத்திற்குள் நுழையும் முன்பே மக்களுக்கு எச்சதிக்கை கொடுத்து அதனைத் திரும்ப காட்டிற்குள் அனுப்பும் முயற்சியில் வனத்துறை ஈடுபட வேண்டும்.

யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்தவர்கள் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து அந்த வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும்.

உடனடியாக சின்னத்தம்பி யானையை பாதுகாப்பாக காட்டிற்குள் அனுப்பு பணியை மட்டுமே அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்

(உங்கள் பெயர், ஊர்)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.