23/02/2019

எம்.ஜி.ஆர் திருடிய திருச்செந்தூர் முருகனின் வைரவேல்...


சின்னப்ப தேவர் தன் குலதெய்வமான மருதமலை முருகன் கோவில் படிக்கட்டுகளின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்தார்.

அதைத் திறந்து வைக்க எம்.ஜி.ஆரை அழைக்க அவர் தி.மு.க வில் இருந்து கொண்டு ஆன்மீக நிகழ்ச்சிக்கு வர இயலாது என்று கூறி விடுகிறார்.

உடனே தேவரின் தாய் எம்.ஜி.ஆரிடம் வேண்டுகோள் விடுக்க அவர் ஒத்துக்கொண்டு விழாவிற்கு வந்தார்.

இதை பலரும் பெருமையாகக் கூறுவார்கள்...

ஆனால் இதே 1980 வாக்கில் எம்.ஜி.ஆர் திருச்செந்தூர் முருகனுடைய வைரவேலைத் திருடி பலகோடிக்கு விற்றார் அப்போதிருந்த அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இதற்கு உடந்தை.

தி.மு.க வினர் இதை பெரிய பிரச்சனையாக்க சி.ஜே.ஆர்.பால் என்பவர் தலைமையில் விசாரணை கமிசன் கூட அமைக்கப்பட்டது.

ஆனால் வேல் கடைசிவரை கிடைக்கவில்லை.

கோயில் பொறுப்பாளர் சுப்பிரமணியபிள்ளை மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

(இதைக் கண்டித்து கருணாநிதி நீதிகேட்டு நெடும்பயணம் என்று மதுரை முதல் திருச்செந்தூர் வரை நடைபயணம் கூட போனார் 1981ல்).

அதன்பிறகு இதே எம்.ஜி.ஆர் பல கோடி மதிப்புள்ள ராமேஸ்வரம் லட்சுமணர் சிலையை திருடினார்.

அது தொடர்பான வழக்கு இப்போது சூடுபிடித்துள்ளது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி வைரவேலை கண்டுபிடிக்க முயன்றிருப்பார் என்று நினைத்தால் நீங்களும் அன்றைய தமிழர்கள் போல அப்பாவியே.

அன்று கருணாநிதி குற்றம் சாட்டிய ஆர்.எம்.வீரப்பனும் சண்முகநாதனும் இன்று அவரது உயிர் நண்பர்கள்.

தமிழக கோவில்களில் சிலைகள் திருட்டு போவது மிகவும் சகஜமாகி...

அதன் பிறகு அதற்கென்று தனி தடுப்புத்துறை உருவாக்கப்பட்டு..

அதன் பிறகும் சிலை திருட்டு திராவிட மாபியாக்களால் நடந்து கொண்டே தான் இருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.