26/02/2019

பிரம்மிக்க வைக்கும் கூர்நுனிக் கோபுரம் அதிசயங்கள்...


உலக அதிசயங்களில் ஒன்றான பெரிய கூர்நுனிக் கோபுரம் (Great Pyramid) (pyro என்றால் நெருப்பு, amid என்றால் மையம்) என அழைக்கப்படும், சியாப் கூர்நுனிக் கோபுரம், எகிப்து நாட்டில் கெய்ரோ நகரத்திற்கு மேற்கே 15 கி.மீ தூரத்தில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 69 லட்சம் தொன் எடையும், (2 லிருந்து 15 தொன் எடை உள்ள 23 லட்சம் கற்களால்), 481 அடி உயரமும்,5 லட்சம் பேர்களால் சுமார் 50

ஆண்டு காலம், 500 மைல்களுக்கு அப்பால் உள்ள அசு(ஸ்)வான் மலையிலிருந்து கொண்டு வந்து நிர்மானித்திருக்கும் முறை அவர்களது கட்டிடக்கலை, பொறியியல் விஞ்ஞான அறிவு, கணிதப் புலமை, ஆத்ம தத்துவஞானம், ஆன்மிகச்சிந்தனை, மனித நேயம், தெய்வீக சக்தி, ஆழ்ந்த வானவியல் ஆகியவை, நமது 21ம் நூற்றாண்டு மனித குலத்தின் அறிவுக்கு சவால் விடும்வகையில் அமைந்துள்ளதோடு பிரம்மிப்பையும் ஊட்டுகின்றன.

உள்ளே உள்ள அரசரின் அறை, இந்த பாலைவனத்தின் நடுவிலும் ஆண்டு முழுவதும் கோடை காலத்திலும், குளிர் காலத்திலும் மாறாத (68*F) வெப்ப நிலையில் எந்தவித கருவியின் உதவியும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளதும், வைக்கப்பட்டுள்ள 23 லட்சம் கற்களில் கற்களுக்கிடையே உள்ள நெருக்கம் காகிதப்படிமனே துல்லியமாக உள்ளதும், உள்ளே உள்ள தெய்வீக சக்தியின் ஆற்றலும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன.

இவை எல்லாத்தையும் விட ஆச்சரியத்தை அளிப்பவை இந்த கூர்நுனிக் கோபுரம் ஒரு பக்க அடிப்பாக நீளம் (760 அடி) 231.6 மீட்டர். இதன் அடிப்பாக சுற்றளவை( 4 * 2331.6 மீ), இதன் செங்குத்து உயரத்தின் இருமடங்கால் வகுத்தால் வருவது 3.142857 ( அதாவது p என்ற இந்த மதிப்பை 5000 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து கூர்நுனிக் கோபுரம் நிர்மானித்தவர்கள் உபயோகப்படுத்தியுள்ளனர்).

இந்த கூர்நுனிக் கோபுரம் செங்குத்து உயரத்தை 100 கோடியால் பெருக்க வரும் எண் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும்.

இந்த பெரிய கூர்நுனிக் கோபுரம் மையத்தில் ஒரு நேர்கோடு வரைந்தால் அது பூமியில் உள் 5 கண்டங்களையும், கடல்களையும் இரு சம்பாதிகளாகப் பிரிக்கிறது. இதன் பொருள் இந்த பெரிய கூர்நுனிக் கோபுரம் பூமியின் கவர்ச்சி மையத்தில் கட்டப்பட்டுள்ளதே.

அரை வினாடி நேரத்தில் பூமி கடக்கும் தூரத்தின் 1000 த்தில் ஒரு பாகத்தை இந்த கூர்நுனிக் கோபுரம் ஒரு பக்க அடிப்பாக நீளமாக அமைத்துள்ளனர். இதற்கு பூமியின் சுழற்சி, வேகம், அளவு ஆகியவற்றை முன்னரே நன்கு அறிந்திருக்க வேண்டும்.

இந்த கூர்நுனிக் கோபுரம் முக்கோணப் பரப்பு அந்த முக்கோணத்தின் உயரத்தின் வர்க்கத்துக்குச் சரி சமமாக அமைந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.