26/02/2019

ரஷ்யாவில் அமானுஷ்யம்...


ஹெலனா ப்ளவாட்ஸ்கி ரஷ்யாவின் 'அமானுஷ்ய' இராணுவ பிரிவின் தலைவர்...

ஜோசப் ஸ்டாலின் நம்பிக்கையான இராணுவ  அதிகாரிகளில் மிக முக்கியமானவர், பனிபோர் காலங்களில் ரஷ்யாவின் இராணுவ பலத்தை அதிகரிக்க அகழ்வாராய்ச்சி, புதைபொருள் தேடல் மூலம் ஆதிகால அமானுஷ்ய சக்திகள் மூலமாக தங்கள் இராணுவத்திற்க்கு ஆற்றலை பெறமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டு. அதில் மும்முரமாக செயல்பட்டார் என கூறப்படுகிறது.

இண்டியானா ஜோன்ஸ் படத்தின் கடைசி பாகமான,
கிங்டம் ஆஃப் கிரிஸ்டல் ஸ்கல், 2008ஆம் ஆண்டில் வெளியான படத்தில் வரும் ஹெலனா ப்ளவாட்ஸ்கி கதாபாத்திரம் இவரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதே...

இவர் பிரம்மஞானம் (Theosophy) எனும் ஒரு புதிய கோட்பாட்டையே! தோற்றுவித்தவர்.

இதன் கோட்பாடுகள்
இறைஞானம்;
பரஞானம்;
தெய்விக ஒளி;
சித்துநிலைகள்; சமய சமரசம் அமைந்த ஒரு புத்துலகச் சமயநெறி ஆகும். தனிச்சிறப்புப் பெற்றவர்களிடம் காணப்படுவதாகக் கருதப்படும் தெய்வீக ஆற்றலுடன் கூடிய சக்தியை பெருவதே இவரின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இந்த கோட்பாடுகளிலும் பல விமர்னங்கள் உண்டு.

பிரம்மஞான சபை ( The Theosophical Society) என்பது ஃப்ரீமேசனரி போலவே  ஒரு அமைப்பு என்பதும், பிரம்மஞானம் (Theosophy) என்ற இந்த சபை;  இரகசிய ஆராய்ச்சி, ஆவிகளோடு பேசுதல், மாந்திரிகம், வேற்றுகிரக உயிர்களின் ஆற்றலை பெறுதல் அல்லது அவர்களை வசப்படுத்துதல். என பலவற்றை தன்னகத்தே கொண்டதாகவும், இந்த ஞானத்தை தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றின் மூலம் குறிபிட்ட சில பலன்களை அடைந்ததாகவும் கூறப்படுகிறது..

ஆனாலும் உண்மையில்  பிரம்மஞானம் (Theosophy) என்பது மனிதகுல வாழ்வுக்கு மேன்மையை அளிப்பதும், சிறப்பைத் தருவதும் ஆகும். ஐந்து ஞானந்திரியங்கள் எனும் தொடு உணர்வு, சுவையுணர்வு, மனஉணர்வு, ஒளி உணர்வு கருவிகளான தோல், நாக்கு, மூக்கு, கண், காது இவைகளுக்கும் - தொழில் செய்கருவிகளான கை, கால், வாய், பிறப்புறுப்பு ஆகியவற்றை  கட்டுப்படுத்தப்பட்ட  வாழ்வாகும்.

ஆறாவது அறிவை மன ஆற்றலோடு இணைத்துக் கொண்டு, ஐந்து உணர்கருவிகளையும், ஐந்து தொழில் கருவிகளையும் விளைவறிந்த விழிப்போடு தனக்கும் பிறர்க்கும் ஆக்க வழிகளில் பயன்படுத்தி வாழும் வாழ்க்கை முறையாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.