20/03/2019

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப் துபாயில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி...


அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப் துபாயில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2016இல் பாகிஸ்தானை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப், மருத்துவ சிகிச்சைப் பெற துபாயில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நரம்பு சம்பந்தமான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு லண்டன் நகரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு “அமைலாடோசிஸ்” என்ற அபூர்வ நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அது மருத்துவ சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, துபாயில் உள்ள தனது வீட்டில் மு‌ஷரப் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த அபூர்வ நோயால் அவர் நிற்கவும், நடக்கவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் துபாயில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் குணமடைந்து அவர் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.