01/04/2019

உண்மையான தியானம்.. ஷென் கல்வி முறை...


ஒரு நாள் ஹோஃபுக்குவின் சீடர்களில் ஒருவனை வரவேற்ற ஜிஸோ, உன்னுடைய ஆசிரியர் என்னக் கற்றுக் கொடுத்தார்? என வினவினார்.

என்னுடைய ஆசிரியர் எந்த தீயவைகளைப் பார்க்காமல் கண்களை மூடிக் கொள்ளச் சொன்னார்.

தீயவைகளை கேட்காமல் காதை மூடிக் கொள்ளச் சொன்னார்.

தீய எண்ணங்களை மனதினில் உருவாக்கமல் பார்த்துக் கொள்ளச் சொன்னர் என்று சீடன் பதிலுரைத் தான்.

நான் உன்னுடைய கண்களை மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன் என்ற ஜிஸோ, ஆனால் நீ எதையும் பார்க்க மாட்டாய்.

உன்னுடைய காதுகளை கைகளால் மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன். ஆனால் நீ எதையும் கேட்க மாட்டாய்.

உன்னுடைய மனதின் எண்ண அலைகளை நிறுத்தச் சொல்ல மாட்டேன். ஆனால் நீ எந்த சிந்தனையையும் மனதில் ஏற்படுத்தாமல் இருப்பாய் என்றார்.

கண் காது  மூக்குகளை மூடுவதால் ஒருவரது எண்ணம் தூய்மையாகாது. எண்ணங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே உண்மையான தியானம் என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.