25/06/2020

உலகில் மண், பெண், பொன் இந்த மூன்றின் வழியே சென்று பொருளையும் புகழையும் சேர்த்து இன்பம் அடைந்து வருகின்றனர்...


மண்ணை சில காலமே காக்கமுடியும் பின்னர் அடுத்தவர் வசமாகிவிடும் அல்லது மண்ணை பார்த்து மகிழ முடியா நிலை வந்துவிடும்..

பெண்ணின்பமே பேரின்பம் என மகிழும் மக்களும் சக்தி இழந்தபின் பெண்ணின் சுகத்தை நினைத்தாலே வேறுக்கும் சூழ்நிலைக்கு ஆளாவது இயல்பு..

பொன்னை சேர்த்து மகிழும் மக்களும் கூட கள்வர்கள் கவர்ந்து விடுவாரோ என எண்ணி வருந்துவர்..

பொருளை கள்வர் கவராது காப்பினும் கொடிய நோய் தாக்கிடில் பொன் இருந்தும் பொருள் இருந்தும் அவைகளால் காக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உண்டல்லவா..

ஆனால் அறவழி செல்லும் தவ வழி சென்றிடின்  நித்திய காலமாக பேரின்ப வெள்ளத்தில் நீந்தி திளைக்கலாம். பேரின்ப நிலையோ ஒரு காலமன்று சதா காலமாக நின்று இன்பம் அடைய வைப்பது..

அதனால்தான் அறவழி சென்ற ஆன்றோர்களை அன்றும் பாராட்டியது இன்றும் பாராட்டுகிறது நாளையும் பாராட்டிக் கொண்டிருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.