19/07/2020

ஒரு வியாபாரக் கொள்ளை மாம்பழம்...


இந்தியாவை பொறுத்தவரை அரசியல் வாதிகளும் பணமுதலைகளும் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் ...

அதற்க்கு நிறைய உதாரணங்கள் இருந்தாலும் இந்த கேடுகெட்ட ஊடகங்கள் மறைக்கக்கூடிய ஒரு விஷயத்தை தான் இப்பொழுது நான் சொல்லப் போகிறேன் .....

இந்தியா ஒரு தனித்தண்மையுடைய நாடு சில நாடுகள் குளிராகவே இருக்கும் சில நாடுகள் வெப்பமாகவே இருக்கும் தட்ப வெட்பம் மிதமாக இருக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியா தான் முதலிடம்..

அதனால் தான் இங்கு பழங்காலத்தில் பிறந்த நமது முன்னோர்களுக்கு எந்த நோயும் இல்லை. காரணம் மிதமான வெப்பமும் மிதமான மழையும் பொழியும் பொழுது மனித உடல் சீராகவே இயங்கும் வெப்பமும் குளிரும் மனித உடலுக்கு தேவை தானே.

இது மேற்கத்திய பணமுதலைகளுக்கு உருத்தியது.

இதற்காக கொண்டு வந்த வெளிநாட்டு ஒப்பந்தங்கள் ஏராளம்.

அதை தான் இன்றும் கடைபிடிக்கிறது பணக்கார நாடுகள்..

நாமளும் நம்ம பிரதமர் வெளிநாடெல்லாம் சுற்றுப்பயணம் செல்கிறார் அதற்ககாகவே நமக்கு பெருமை என்பதை நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம் விஷயம் அதுவல்ல.

ஒரு நாட்டுக்கு அரசமுறை சுற்றுப்பயணம் செய்தாலும் அங்கே சில ஒப்பந்தங்கள் உண்டு...

அது அவர்களுடைய நாட்டில் எல்லா செய்தியிலும் வரும் ஆஹா ஓஹோ என்று கொண்டாடுவார்கள்.

இந்திய செய்தி துறை எதை சொல்கிறதோ அதை தான் இந்திய ஊடகங்களும் ஒளிபரப்பும்...

இதனால் பல விஷயங்கள் நமக்கு தெரிவது இல்லை..

இதனிடையில் ஒரு வியாபரக்கொள்ளை இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது அது என்ன தெரியுமா ?

ஒரு ஆங்கில செய்தி நிறுவனம் இந்தியாவை பற்றிய வெளியிட்ட செய்தி
உலகில் மாம்பழம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் இடத்தில இருப்பது இந்தியா தான் என்பது தான் அந்த செய்தி..

தொடர்ந்து அந்த செய்தி நிறுவனம் சொல்கிறது ஒரு வருடத்திற்கு 15 மில்லியன் [tons ] டன் இந்தியாவை விட்டு அயல்நாட்டிற்கு செல்கிறதாம்...

35 வகையான மாம்பழம் இந்தியாவை விட்டு வருடத்திற்கு 15 மில்லியன் டன் வெளிநாட்டிற்கு போகிறது என்றால் இந்திய மாம்பழ விவசாயிகள் பணக்காரர்களில் ஒருவர்களாக இருக்க
வேண்டுமே எங்கே இவர்களது உழைப்பு?

மாம்பழ விவசாயிகள் என்று எந்த பத்திரிக்கையிலாவது செய்தி வந்தது உண்டா ?

அல்லது மாம்பழ விவசாயிகள் யாராவது இன்று பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்களா ?

மாம்பழம் பிழியப்படுவது போன்று பிழியத்தான் படுகிறது இந்திய பிரஜையின் உழைப்பு வெளிநாட்டுக்காக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.