14/07/2020

கபசுக் குடிநீர் வாங்குவதிலும் கூடவா முறைகேடு?



இந்த இரண்டு புகைப்படங்களில் இரண்டு கபசுரக் குடிநீர் டப்பிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒன்று தமிழ்நாடு அரசின் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சார்பில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அரசு சார்பாக வழங்கியது.

இன்னொன்று திமுக எம்.எல்.ஏ மூர்த்தி தன் சட்டமன்ற நிதியிலிருந்து வழங்கியது.

இரண்டுமே 50 கி புட்டிகள் தான். இரண்டுமே ஒரே நிறுவனத்தின் தயாரிப்புகள் தான்.



திமுக-வின் சட்டமன்ற உறுப்பினர் வழங்கியதில் விலை ருபாய் 50 என்று போடப்பட்டிருக்கிறது.

அதிமுக அமைச்சர் வழங்கியதில் 75 ரூபாய் என்று போடப்பட்டிருக்கிறது.

ஒரு கபசுரக்குடிநீர் டப்பாவிற்கு 25 ரூபாய் வித்தியாசம் எப்படி வர முடியும்?

அப்படி என்றால் எத்தனை கபசுர குடிநீர் புட்டிகள் விநியோகிக்கப்பட்டன? ஒவ்வொன்றுக்கும் 25 ரூபாய் என்றால், இதில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது?

கொரோனாவுக்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதிமுக அரசு கொரோனாவை லாபமாக பார்க்கிறதோ என்ற கேள்வியினை இது  எழுப்புகிறது.

கொரோனா சிகிச்சைக்கான நிதி ஒதுக்கீட்டிலும், கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் இதர விநியோகங்களிலும் அதிமுகவினரால் ஊழல் எவ்வளவு நடத்தப்பட்டிருக்கிறது என்பது விசாரிக்கப்பட வேண்டும்.

மக்கள் உயிருக்காக போராடும் சூழலிலும் கூட, அதைப் பயன்படுத்தி ஊழல் செய்பவர்களை என்னவென்று சொல்வது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.