24/08/2020

திமுக வும் ஜனநாயகமும்...



1972ல் திமுகவை விட்டு எம், ஜி, ஆர் விலகியபோது அவர் தொடங்கிய அதிமுகவில் சேர்ந்து விட்டார் ராகவானந்தம்.

அந்தக் கோபத்தில் திமுகவில் எம். எல். சி, யாக (சட்ட மேலவை) இருந்த ராகவானந்தம் தனது எம்.எல.சி. பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ஒரு கடிதம் அன்றைய மேலவைத் தலைவரிடம் தரப்பட்டது.

ஆனால் தான் விலகல் கடிதத்தை எழுதவில்லை என்று ராகவானந்தம் மறுத்தார்.

கடிதம் தரப்பட்ட அன்று அவர் திருச்சியில் இருந்தார்.

ஆனால் அவர் கையெழுத்திட்ட விலகல் கடிதம் அன்றைய மேலவைத் தலைவரிடம் தரப்பட்டது, இது எப்படி என விவாதம் கிளம்பியது.

அப்போது தான் ராகவானந்தம் திமுக தலைவர் கருணாவின் தந்திரத்தை அம்பலப்படுத்தினார்..

திமுகவில் சட்டமன்றத்துக்கோ அல்லது மேலவைக்கோ ஒருவர் உறுப்பினராக நிறுத்தப்படும்போதே அவரிடம் வெள்ளைத் தாள் ஒன்றில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வாராம்.

அப்படி தன்னிடம் வாங்கி வைத்திருந்த தாள் தான் கையெழுத்திட்ட வெற்றுத்தாளில் எம்.எல்,சி பதவியில் இருந்து விலகியதாக எழுதி மேலவை உறுப்பினர் பதவி¨ பறித்துக் கொண்டனர்,

இந்தக் கண்ணியம் மிக்க தகவல் இன்றைய தலைமுறையினருக்குத தரியாது என்பதால் ஞாபகப் படுத்துகிறேன்.

திமுகவிலிருந்து உருவான அதிமுக வேறு எப்படி மாறுபட்டிருக்க முடியும். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

கருணாவின் அறிவுக்கூர்மை மிக்க இச்செயலை ஸ்டாலினிடம் எந்த செய்தியாளராவது கேட்பார்கள் என எதிர்பார்த்தேன்.

ஆனால் பெரும்பாலும் தொலைக்காட்சிகளில் இப்போது ஆரியர் பாதி திராவிடர் பாதி என்பதால் இதைப் பற்றிப் பேச மாட்டார்கள், நினைவுபடுத்த மாட்டார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.