27/08/2020

குழந்தையால் தந்தைக்கு ஏற்படும் தோஷம்...


ஒரு பெண் குழந்தையின் ஜாதகத்தில் பிதுர்ஸ்தானமாகிய ஒன்பதாமிடமும், அதன் அதிபதியும், பிதுர்காரகனான சூரியனும் பலம் பெற்றிருக்க வேண்டும். 

லக்னத்திற்கு அல்லது சூரியனுக்கு முன்னும் பின்னும் பகை அல்லது நீசமான கிரகங்கள் இருபுறத்திலும் இடம் பெற்றிருந்தால், ஒன்று அக்குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போதே அக்குழந்தையின் தந்தை இறப்பார் அல்லது அக்குழந்தை இறக்கும். 

பிதுர்ஸ்தானமாகிய ஒன்பதாமிடத்தில் சனி, ராகு, கேது அதன் பெற்றோருக்கு இருந்தால் கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் ஏற்படும்.  பொன், பொருள், பூமி அனைத்தையும் இழப்பார்கள்.  மீண்டும், பட்டமரம் துளிர்ப்பது போல், தெய்வ அனுகூலத்தினால் பழைய உன்னத நிலையை அடையக்கூடிய பாக்கியம் உண்டாகும்..

பௌர்ணமியன்று ஏன் நிலாச்சோறு?

சந்திரன், உயவிற்கு அதிபதியானவர், சந்திரன் ஒரு ஜாதகத்தில் வலுத்திருந்தால், அவருக்கு உணவுக்குப் பஞ்சம் இருக்காது. ருசியான உணவை விரும்பி உண்ணக்கூடியவர்..

பௌர்ணமி இரவு அன்று எல்லோரும் சேர்ந்து வீட்டு முற்றத் தில், மாடியில் நிலாவைப் பார்த்துக்கொண்டே நிலாச்சோறு சாப்பிடுவார்கள். பௌர்ணமி அன்று ஒரு குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய் கூட நிலவைக் காட்டி உணவு ஊட்டும் அதிசயத்தைப் பாருங்களேன்.

சித்திரை மாதம் பிறந்தவரின் பலன்கள்
ஜாதகர் சித்திரை மாதத்தில் பிறந்தால் அவர் தந்தைக்கு ஆகாது எனச் சொல்லப்படுவது உண்டு.

மேஷ ராசியில் சித்திரை மாதத்தில் சூரியன் உச்சத்தில் இருப்பார். சூரியன், தகப்பனாரைக் குறிக்கும் கிரகம். எனவே, ஜாதகத்தில் சூரியன் கலம் பெறுவதால் எப்பொழுதும் மகனை குறை சொல்லியும் மிரட்டியும் விரோதம் காட்டுவார். மகனும் தந்தையை விரோதி போல பாவிப்பார்.

அதே போல், ஐப்பசி மாதம் பிறந்த ஜாதகரின் ஜாதகத்தில் சூரியன் நீசத்தில் இருப்பார், எனவே, அந்த ஜாதகருக்கு தகப்பனார் பயப்படுவார் அல்லது இருவரும் நண்பர்கள் போல பழகுவார்கள். 

தோஷத்துடன் பிறக்கும் குழந்தை எது?

உலகத்தில் ஒரு குழந்தை பிறக்கும் போது கொடி சுற்றிக் கொண்டு பிறந்தால் அது தந்தைக்கும், பங்காளிக்கும் ஆகாது.

அதே போல், மாலை போட்டுக் கொண்டு பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது.

அதற்கு புண்ணிய தினத்தன்று தக்க சாந்தி பரிகாரம் செய்து கொண்ட பின்னர், குழந்தையின் முகத்தில் விழிக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.