12/08/2020

தேசியக் கொடியை அவமரியாதை செய்ததாக எஸ்.வி.சேகர் மீது வழக்கு...



தேசியக் கொடியை அவமரியாதை செய்ததாக பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வும் நகைச்சுவை  நடிகருமான எஸ்.வி.சேகர் மீது  124ஏ. 153பி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தொடரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை பா.ஜ.க நிர்வாகிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக 2006ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் தமிழக அரசை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த எஸ்.வி.சேகர், “முதலமைச்சர் இருமொழி கொள்கை தொடரும் என்று கூறியுள்ளார். இந்த ஆட்சி தொடருமா என்றே தெரியவில்லை. தி.மு.க-வின் விஷயங்களை அ.தி.மு.க ஏன் தூக்கிச் சுமக்கிறது எனப் புரியவில்லை. தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி வந்துவிட்டதா.

காவி டிரெஸ் போட்டால் காவி களங்கம் என்கிறார்கள். தேசியக் கொடி களங்கமா? காவியைக் கட் பண்ணிவிட்டு, வெள்ளையும் பச்சையும் கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இருந்தால்போதும், இந்துக்கள் வேண்டாம் என்கிற முடிவுக்கு நீங்களும் வந்துவிட்டீர்களா? உங்கள் தலைமைச் செயலகம் எது அறிவாலயமா? அல்லது எந்த இடம் என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்” என்று கூறியிருந்தார்.

எஸ்.வி.சேகர் கூறிய கருத்துக்கள் தேசியக் கொடியை அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது என்று பலரும் குற்றம்சாட்டி வந்தனர். அவர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.வி.சேகர் மீது சிலர் புகார் அளித்தனர்.

அந்த புகார் மனுவில், “தேசியக் கொடியை அவமரியாதை செய்ததுடன், தமிழக முதலமைச்சர் பற்றி அவதூறான கருத்தை எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். அவர் மீது தேசிய சின்னங்களை அவமரியாதை செய்ததாக செக்‌ஷன் 124ஏ. 153பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் அவர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.