21/09/2020

சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)...

 


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ச் சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)..

ஒரு நாளைக்கு எத்தனை தடவை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்?

உடலிலுள்ள நரம்பு, நாடிகள் எத்தனை?

ஆண், பெண், அலியாவது ஏன்?

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்..

உலகில் எத்தனை இலட்ச தோற்றபேத ஜீவராசிகள் உண்டு?

சிதம்பர இரகசியம் என்றால் என்ன?

இயற்கையின் செயல்பாடுகள்...

ஆண் பெண் சேர்க்கையால், உயிரும், உடம்பும் சுக்கில சுரோணிதம் என்ற திரவப்பொருள் சேர்ந்து கரு கூடுகிறது (ஆண்பால் உள்ள சுக்கிலமும், பெண்பால் உள்ள சுரோணிதமும் ஆக இரண்டுமே பஞ்சபூதங்களின் சாரமாகும்).

பின்பு 10 மாதம் தீட்டு வெளியாகாமல் கரு வளர்கிறது. பின் குழந்தை பிறக்கிறது.

குழந்தை மென்மையும் சற்றுத் திடப்பொருளாகவும் இருக்கும்.

பிறகு வளரவளர மென்மையும் திடப்பொருளாகவும் வளர்கிறது.

பிறகு நாளுக்கு நாள், பாலர் பருவம், வாலிபம், முதுமையுமாக பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு நரை, திரை வரும். உடம்பு தளர்ந்து போகும்.

உடம்பை விட்டு ஆன்மா பிரிந்துவிடும்.

உயிர் தோன்றும் போது உடம்பும் உயிருமான சுக்கில, சுரோணிதமாகிய திரவப்பொருளாக இருந்த இந்த உடம்பு, திடப்பொருளாக மாறி இறந்துபோகிறது.

இது மிக நுட்பமான இயற்கையின் செயல்பாடாகும்.

பரிணாம வளர்ச்சியும் அதன் இயல்பும்..

சடப்பொருள் நீங்கலாக மற்ற எல்லா சீவராசிகளும் அதனதன் அமைப்பின்படி பரிணாம வளர்ச்சிக்குட் பட்டிருக்கும்.

இதை உண்மைப்பொருள் அறிந்தவர்கள் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது.

அதன் போக்கில்தான் சென்று சாகவேண்டும்.

ஆனால் மனிதன் மட்டும் தடுக்கவும் வெல்லவும் முடியும்..

ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்

நீர்பறவை நாற் காலோர் பப்பத்துச் - சீரிய

பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த

அந்தமில் சீர்த்தாவரநா லைந்து.

ஊர்வன : 11

மானுடம் : 9

நீர் :10

பறவை :10

நாற்காலோர் :10

தேவர் :14

தாவரம்(4*5) : 20

மொத்தம் = 84

ஆக 84 இலட்ச தோற்றபேத ஜீவராசிகளாகும்.

மேற்கண்ட பாடலில் 7 வகை தோற்றத்தைப் பற்றி உள்ளது.

இந்த ஜீவராசிகள் நான்குவகை யோனி வாயிலாக தோன்றும்.

குறிப்பாக கருப்பை முட்டை மற்றும் வெப்பம், வியர்வைகளால் தோன்றும்.

தரையில் ஊர்ந்து செல்வது 11 லட்சம் தோற்ற பேதங்கள் உதாரணமாக பாம்பு, பல்லி, தேள், நட்டுவாக்கிளி, புழு போன்றவைகள்.

மானுடம் 9 லட்சத் தோற்ற பேதமுடைய மனிதர்கள்.

நீர்வாழ் ஜீவராசிகள் பத்துலட்ச தோற்ற பேதமுடையவைகள். உதாரணமாக மீன், திமிங்கலம், முதலை, தவளை போன்றவை.

பறவை இனங்கள் 10 லட்ச தோற்ற பேதமுடையவை. உதாரணமாக புறா, காகம், கிளி போன்றவை.

நாற்காலோர் (நான்கு காலுடைய ஜீவராசிகள்) பத்து லட்ச தோற்ற பேதங்கள். உதாரணமாக யானை, குதிரை, மான் போன்றவை..

நமது கண்களுக்குப் புலப்படாத 14 லட்சம் தேவர்கள் இருக்கிறார்கள்..

தாவரங்கள் மட்டும் 20 லட்சம் தோற்ற பேதங்கள் கொண்டவை..

மனிதர்கள் உட்பட மற்ற எல்லா ஜீவராசிகளும் உயிர்வாழ இயற்கை கொடுத்தது. புல், செடி, கொடி, மரம் நான்கு தான்.

புல் வகை என்பது குறுகிய கால பலன் தரக்கூடிய கம்பு, நெல், கேழ்வரகு, சோளம் போன்றவை.

செடி என்பது மிளகாய், தக்காளி, கொத்தவரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவை.

கொடி வகைகள் : அவரைக்காய், புடலங்காய், பீக்கங்காய், சுரக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய் மற்றும் சில கொடி வகை மூலிகைகளும், வேலிப்பருத்தி முதல் உண்டு.

மரம் : மா, தென்னை, பனை ஆகிய கணக்கில் அடங்கா வகைகள்.

குறிப்பு..

மனிதனுக்கும் மற்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் பசி இயற்கையே.

அதனதன் உடல் இயல்புக்கேற்ப உணவும் இயற்கையே, அதை உண்ணுவதும் இயற்கையே, அதை உண்டபின் ஜீரணமாகக்கூடிய இயல்பும் இயற்கையே.

உணவில் உள்ள சத் அசத்தை பிரித்து, அசத்சை நீக்கி, சத்தை மனிதனுக்கு 72 ஆயிரம் நாடி நரம்புகளையும் உரமேற்றுவதும் இயற்கையே.

பின்பு அதன் காரணமாக மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்த கரணங்களும் இயற்கையே. மெய், வாய், கண், மூக்கு, செவி, என்று சொல்லப்பட்ட பொறிபுலன்கள் அடங்கிய தத்துவம் 96ம் இயற்கையின் செயல்பாடுகளே.

நாம் நமக்கு பசி வந்ததாகவோ, நாம் உண்ணுவதாகவோ நினைக்ககூடாது.

பசியும் இயற்கையே, நாம் உண்ணுவதும் இயற்கையே, அறுசுவையும் இயற்கையே, உறங்குவதும் இயற்கையே, உறங்கி விழிப்பதும் இயற்கையே, உடல் இன்பமும் இயற்கையே, கரு கூடி பின் குழந்தை ஆவதும் இயற்கையே.

ஆக அனைத்தும் இயற்கையின் செயல்பாடாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.