19/09/2020

சனியால் உண்டாகும் ராஜயோகம்...

 


சனி ராசிக்கு 3,6,11 ல் சஞ்சரிக்கும் யோகம் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது..

பிறக்கும்போது ஜாதகத்தில் 3,6,11ல் இருந்தாலும் ராஜயோகமான அமைப்பு என எடுத்துக்கொள்ளலாம்...

சனி லக்னத்துக்கு எட்டில் இருந்தால் ஆயுள் பலம் கூடும்.. நல்ல ராஜயோகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்..

சனி பார்க்கும் இடம் அதிக சோதனைகளை உண்டாக்கும்...

5ஆம் இடத்தை சனி பார்த்தால் எவ்வளவு வசதியானவராக இருப்பினும் நிம்மதி இருக்காது..

லக்னத்தில் இருக்கும்போது நிறைய போராட்டங்களை வாழ்வில் உண்டாக்குகிறார்...

 லக்னத்துக்கு 7ஆம் வீட்டை பார்க்கும் போது குடும்ப வாழ்வில் சோதனை , விரும்பிய பெண் கிடைக்காமை, இல்வாழ்வில் நிம்மதி குறைவு..

10ஆம் இடத்தை சனி பார்க்கும்போது தொழிலில் போராட்டம், அடிக்கடி இடமாறுதல்,பணப்பற்றாக்குறை ,தொழில் மந்தம் உண்டாக்குகிறார்..

 சனி 7ஆம் வீட்டில் இருக்கும்போது காலம் கடந்த திருமணம் ,கலப்பு திருமணம் போன்றவை நடக்கிறது.. சிலருக்கு வயதில் மூத்தவர்களை திருமணம் செய்யும் நிலையும் உண்டாகும்..

 இந்த அமைப்பெல்லாம் சனி திசா புத்தி நடக்கும்போது அதிக சக்தியுடன் பலன் தருகிறது..

10ல் சனி வேகமான வளர்ச்சியும் வேகமான வீழ்ச்சியும் உண்டாக்கும்...

 9ஆம் இடத்தில் சனி இருந்தால் 5ல் சனி இருந்தால் பூர்வீக சொத்தை அனுபவிக்கும் பாக்யம் இருக்காது 5ல் சனி குழந்தைகளால் உண்டாகும் நிம்மதி குறைவை சொல்கிறது..

 சனி 4ல் இருந்தால் தனிமையை அதிகம் விரும்புவர். உடல் நலக்குறைபாடு அடிக்கடி உண்டாகும் சொத்து , வீடு வாங்குவதில் தடை உண்டாகிறது..

 2ல் சனி பண வரவு செலவு இடற்பாடு உண்டாக்குகிறது... பேச்சில் உறவு, நன்பர்களை பகையாக்கி விடுகிறது.. கண் , பல் கோளாறுகளை உண்டாக்கும்..

 11ல் சனி மூத்த சகோதர பகை , சேமிப்புக்கு தடை உண்டாக்கும் 12ல் சனி நிம்மதியற்ற உறக்கம்... குடும்பத்தில் கலகத்தை குறிக்கிறது..

 திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவதால் தோசம் குறையும் சனிக்கிழமையில் விரதம் இருந்து நவகிரக சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவதால் நிம்மதி பெறலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.