03/10/2020

காந்தியும் பிரம்மச்சரிய சோதனையும்...

 


காந்தி தனது பாலியல் ஆசைகளைத் துறந்து தன்னால் கட்டுப்பாடாக இருக்க முடியும் என்பதை தனக்குதானே நிருபிக்க தொடங்கியதே இந்த பிரம்மச்சரிய சோதனை அதாவது பருவப் பெண்களுடன் அருகில் ஆடையின்றி உறங்குவதாக அப்பயிற்சி தொடங்குகிறது."ஜெகி என்னருகில் படுத்திருந்தார்"என அவர் அதைப் பதிவும் செய்திருக்கிறார். தொடர்ந்து அவர் இந்தப் பயிற்சியின் வரம்பை விரிவாக்கிக் கொண்டே சென்றார். அவரது பிரம்மச்சர்யச் சோதனைகளில் பிரபாவதி நாராயணன்  சுசிலா நய்யார், லீலாவதி அசர், அப்துல் சலாம், பத்மஜா நாயுடு, மீரா பென், ஆபா, மனு காந்தி எனப் பலரும் பல்வேறு வகைகளில் அந்த சோதனையில் பங்கு பெற்றனர். பிரம்மச்சரிய சோதனைகளை மனைவியுடன் மட்டும் நிறுத்திக் கொள்வது போதும் என காந்தி நினைக்கவில்லை அது பெரிய விஷயமில்லை. பிற பெண்கள், குறிப்பாகப் பருவ வயதிலுள்ளோருடன் மேற்கொள்ளப்படுதலே சரியான சோதனை எனக் கருதினார்.பழக்கப்பட்ட பெண்களை தவிர்த்து புதிய பெண்களுடன் சோதனைகள் தொடர்ந்தன.

தானும் இந்த பிரம்மச்சரிய சோதனைகளில் பங்கெடுத்ததாக காந்தி தனது நம்பிக்கைக்குரியவராக எந்த பெண்ணை கருதினாரோ, எந்தப் பெண் காந்தியின் இறுதிக்காலம் வரையிலும் அவருக்கு உதவியாக இருந்து வந்தாரோ, எந்தப் பெண் காந்தியின் சிக்கலும், கொந்தளிப்புமான இறுதிநாட்களில் அவரது வரலாற்றைப் பதிவு செய்யும் ஆசிரியராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தாரோ. எந்த பெண்ணின் தோளில் சாய்ந்தவாறு காந்தியின் இறுதி மூச்சு அடங்கியதோ...

அதே மனுகாந்தி தான் காந்தியின் கையெழுத்தோடு டைரிக்குறிப்புகளில் இதனை குறிப்பிட்டுள்ளார் பின்னாளில் ஆங்கில புத்தகமாகவும் வெளிவந்தது...

படம் :இடது ஆபா வலது மனுகாந்தி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.