24/10/2020

மூன்று தமிழ் சங்கங்கள்...

 


மூவேந்தரும் தமிழ் வளர்த்தனர் என்றாலும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியருக்கே உரியது.

சங்கம் என்ற சொல் தொல்காப்பியத்தில் இல்லை. சங்கம்  என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் மணிமேகலை நூலின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.

மூன்று சங்கங்கள் பற்றிய விரிவான செய்தியை அல்லது வரலாற்றை முதலில் குறிப்பிட்டவர் இறையனார் அகப்பொருள் உரையின் ஆசிரியர் நக்கீரர்.

முச்சங்கத்திற்கும் உரிய நூல் அகத்தியம்.

முத்தமிழ் இலக்கண நூல் அகத்தியம்.

இயற்றமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம்.

இசைத்தமிழ் இல்க்கண நூல் முதுநாரை. நாடகத் தமிழ் இலக்கண நூல் இந்திரகாளியம் மற்றும் பஞ்சமரபு ஆகியன.

புலவர்களின் தலைவர் என்று குறிப்பிடப்படுபவர் அகத்தியர். அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர்.

அகத்தியரின் 12 மாணவர்களும் சேர்ந்து எழுதிய நூல் பன்னிரு படலம்.

அகத்தியர் எழுதிய நூல் அகத்தியம் தென்தமிழ் மதுரை என்று குறிப்பிடுவது மணிமேகலை.

சங்கத் தமிழ் மூன்றும் தா என்பது ஒளவையாரின் தனிப்பாடல் ஆகும்.

முச்சங்கத்தையும் மறுத்தவர்ள் பி.டி.சீனிவாச ஐயங்கார், கே.என். சிவராஜ பிள்ளை, கா.மச்சிவாய முதலியார் ஆகியோர்.

மூன்று சங்கங்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் உ.வே.சாமிநாத ஐயர், கா.சு.பிள்ளை, கா.அப்பாத்துரை, தேவநேயப் பாவணர் ஆகியோர்.

முதற்சங்கம்...

முதற்சங்கம் இருந்த இடம் தென்மதுரை. முதற்சங்கத்தின் காலம் சுமார் 4440 ஆண்டுகள். முதற்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 549.

முதற்சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 4449.

முதற்சங்கம் சார்ந்த நூல்கள் அகத்தியம், பெரும் பாரிபாடல், முதுநாரை, முதுகுருகு ஆகியன.

முதற்சங்கம் சார்ந்த புலவர்கள் அகத்தியர், நிதியின் கிழவன் ஆகியோர்.

இடைச்சங்கம்...

இடைச்சங்கம் இருந்த இடம் கபாடாபுரம் (குமரி ஆற்றங்கரை). இடைச்சங்கத்தின் காலம் சுமார் 3700 ஆண்டுகள். இடைச்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 3700.

இடைச்சங்க நூல்கள் தொல்காப்பியம். மாபுராணம், பூதபுராணம் ஆகியன.

கடைச்சங்கம்...

கடைச்சங்கம் இருந்த இடம் மதுரை (இன்றைய மதுரை). கடைச்சங்கத்தின் காலம் சுமார் 1850 ஆண்டுகள் கடைச்சங்கத்தில் புலவர்கள் 449 பேர்.

கடைச்சங்கம் சார்ந்த நூல்கள் நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றினை, புறநானூறு, ஐந்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல், கூத்து, வரி ஆகியன.

சிறுமேதாவியார், அறிவுடையார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதனிள நாகனார், நக்கீரனார் ஆகியோர் கடைச்சங்க காலப் புலவர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.