22/10/2020

பிரதமர் மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக் செய்து செருப்படி... சுதாரித்துக் கொண்ட பாஜக...

 


இந்தியாவில் இது திருவிழா காலம் என்பதால், இந்தக் காலகட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் மேலும் தீவிரமாகக் கூடும் என்று நரேந்திர மோதி எச்சரித்த காணொளி சமூக ஊடகங்களில் பேசுபொருள் ஆகியுள்ளதாக இந்தியா.காம் செய்தி இணையதளம் தெரிவிக்கிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி செவ்வாய்க்கிழமை மாலை இந்திய மக்களுக்கு உரையாற்றியது பாரதிய ஜனதா கட்சியின் அலுவல்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

நரேந்திர மோதி பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 4,500க்கும் அதிகமான முறை அந்த காணொளியை டிஸ்லைக் செய்திருந்தனர். இதன் காரணமாக அந்தக் காணொளியில் லைக் மற்றும் டிஸ்லைக் பட்டன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஜேஈஈ, நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக இதற்கு முன்பும் நரேந்திர மோதியின் உரைகள் பாஜகவின் யூடியூப் பக்கத்தில் லட்சக் கணக்கில் டிஸ்லைக் செய்யப்பட்டிருக்கின்றன.

ஒருவேளை இதை எதிர்பார்த்து கமென்ட் செய்வதற்கான வாய்ப்பும் இந்த காணொளியில் நீக்கப்பட்டிருந்தது நிகழ்ந்திருக்கலாம் என்று இந்தியா.காம் செய்தி இணையதளம் தெரிவிக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.