17/10/2020

எண்ணங்கள்...

 


அடிப்படையில் ஒருவனை உணர்ந்த கொள்ள எண்ணங்கள் தான் மூலம் அதை  கவனித்தால் போதுமானது..

எப்படி கவனிப்பது ஒவ்வொரு எண்ணங்களையும் சாதாரணமாக  கவனித்து கொண்டு அதன் இயல்பு நமக்கு உள்ளே  பொருந்துகின்றதா- இல்லையா, (உடல் ரசாயன மாற்றம் இல்லாத நிலை உள்ளதா) என்பதை பார்த்ததால் போதுமானது..

எண்ணத்தை நல்ல எண்ணம் தீய எண்ணம் என்று பார்க்கும் வரை குற்ற உணர்வும் - அடக்கு முறைகளும் தான் வளரும் அங்கு தெளிவு பிறக்காது..

அந்த தெளிவில் எண்ணத்தின் மூலம் இருக்கும் பற்றுகள் கொண்ட அடர்த்தி குறைந்து எண்ணங்கள் லேசாக மாறுவதும் அதன் பின் எண்ணங்கள் கரைந்த நிலைக்கு செல்ல முடியும்..

இந்த எண்ணங்கள் கரைந்த நிலையில் வெற்றிடம் இயல்பாக உணர முடியும்..

இந்த தன்மை வரும் பொழுது அங்கு எண்ணம் எழும் அலைத்தன்மை வெகு அழகாக கவனிக்க முடியும். அது இயல்பாக மலரும் பூவை போல நமக்கு உள்ளே இருந்து உணர்வின் வெளிப்பாட்டில் நடைமுறை வாழ்க்கையில் வளம் வருகிறது..

இந்த அடிப்படை தான் தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆழ்ந்த கவனிப்பில் நிகழும் ஒன்று..

கவனித்தல் என்பது உணராதவர். உணர்ந்து கொண்டிருப்பவர். உணர்ந்தவர் என  எல்லோருக்கும் பொதுவான நிகழ்வு- ஏன் ஞானியே ஆயினும் இதே நிலை தான் என்ற அடிப்படை தெளிவுக்கு வரும் வரை எண்ணம் என்பதில் குழப்பமே தீராது..

தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி கொண்டே இருக்க வேண்டியது தான்..

ஒவ்வொரு குணத்திற்கு மூலம் எண்ணமே - அதற்கு மேலே உள்ளவாறு கவனித்தால் இயல்பாக எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும் உணர்வின் அடிப்படையில்..

ஆன்மீகம் ஆன்மீக விவாதங்கள் இயல்பாக மலர வைக்கும் தன்மையாக இருக்க வேண்டும் - மாறாக குற்ற உணர்வையும் - நல்லவன்- கெட்டவன் - நல்லது - கெட்டது - அவனை அடிமை படுத்தி மேலே எழுந்து கொள்ள முடியாத சுமைகளை திணிக்க கூடாது..

உணர்வின் ஆழத்தில் பயணிக்கும் போதே இந்த தன்மை கூட புரிந்து கொள்ள முடியும்..

விழிப்புணர்வுக்கும் ஆரம்ப நிலைக்கும் பெரிய இடைவெளி உருவாக்கும் நிலை மனம் தான் - எண்ணத்தை சீரமைப்பது விழிப்புநிலையில் தான் நிகழ்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்..

மனதின் அடிப்படையில் இயங்கும் எண்ணத்தை கரைத்து மனம் என்ற அடிப்படையை கடந்து வெற்றிடத்தை பார்ப்பதே ஆன்மீகம்..

பெரிய மலையை தூக்கும் வேலை இல்லை.. ஒரு  இயல்பான கொண்டாட்டத்தில் தன்னை  உணர்ந்து கொள்வது அவ்வளவே..

தியானம் அதற்கு மூலம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.