நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மறைவுக்கு, இந்திய நாட்டின் முதல் பிரதமராக இருந்த நேருதான் முக்கிய காரணம் என்று பாராதீய ஜனதா கட்சியை சேர்ந்த சு.சாமி கூறியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தின் மீரட் நகரில் 23.01.2015 அன்று நடைபெற்ற நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் பிறந்த நாள் நிகழ்வில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது, 2வது உலகப் போர் முடிவடைந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸ் போர்க் குற்றவாளியாக தேடப்பட்டார்.
அப்போது சோவியத் ரஷ்யாவுடன் நட்புறவு கொண்டிருந்தார் நேதாஜி.
இதனால் சோவியத் ரஷ்யா தமக்கு அடைக்கலம் கொடுக்கும் என்றும் நேதாஜி முழுமையாக நம்பினார். இதனால் அவர் சோவியத் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த மன்சூரியா என்ற இடத்துக்கு சென்றடைந்தார்.
அதன் பின்னர், அப்போதைய ரஷ்யா அதிபர் ஸ்டாலினை நேதாஜி சந்தித்த போது கைதியாக சிறைபிடிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து 1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நேருவுக்கு ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில் தம்முடைய கஸ்டடியில் தான் நேதாஜி இருப்பதாகவும், அவரை என்ன செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டிருந்தார்.
உடனடியாக 1945ஆம் ஆண்டு டிசம்பர் 26-ந் திகதி நேரு தம்முடைய ஸ்டெனோகிராபர் சியாம் லால் ஜெயின் என்பவரை அழைத்து இங்கிலாந்து பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த உண்மைகளை 1970ஆம் ஆண்டு நேதாஜி மரணம் தொடர்பாக விசாரித்த கோசலா கமிஷன் முன்பு ஜெயின் கூறியுள்ளார்.
அதாவது ஜெயின் கூறியபடி, சோவியத் ரஷ்யாவில் நேதாஜி சிறையில் இருப்பதை பிரிட்டிஷ் பிரதமருக்கு நேரு தெரியப்படுத்தியிருக்கிறார்.
அதன் பின்னர் சோவியத் ரஷ்யாவுக்கு சென்ற பிரிட்டிஷ் அதிகாரிகள் நேதாஜியை கொல்ல உத்தரவிட்டிருக்க வேண்டும் என்ற யூகத்தில் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்...

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.