11/02/2021

ஓஜா பலகை மூலம் ஆவியுடன் பேசுவது எப்படி.?

 


ஓஜா பலகை பற்றி சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எதிர்காலம் பற்றி அறியவும், இறந்தவர்களுடன் பேசவும் உதவும் ஊடகங்களில் பிரபலமானது இது தான். இதை தமிழில் ப்லாஞ்செட் பலகை எனவும் ஓஜா பலகை எனவும் இன்னும் பல விதமாகவும் சொல்கிறார்கள். இப்பதிவில் Ouija பலகை பற்றியும் அதை வீட்டில் செய்வது பற்றியும், பயன்படுத்தும் முறை பற்றியும் இதன் உண்மை தன்மை பற்றியும் சுருக்கமாக இப்பதிவு விளக்குகிறது. 

ஆவியுடன் பேச ஒரு அறை வேண்டும். அங்கே விளக்கு, மின்விசிறியை அணைத்து விட வேண்டும். மேலும் குறைந்தது நான்கு பேர் தேவை. தரையில் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு சாக்பீஸால் வரைய வேண்டும். கூடவே ஒரு சிறு எவர்சில்வர் டம்ளரும், ஒரு சிறு மெழுகுவர்த்தியும் தேவை. அந்த மெழுகுவர்த்தி டம்ளரின் அளவிற்கு கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். சாக்பீஸில் படத்தை வரைய வேண்டும். 

அனைவரும் சுற்றிலும் உட்கார வேண்டும் நடுவில் உள்ள வட்டத்தில் மெழுகுவர்த்தியை வைத்து கொளுத்தவும். பிறகு மெதுவாக எவர்சில்வர் டம்ளரை மெழுகுவர்த்தி மேல் கவிழ்க்க வேண்டும். எவர்சில்வர் டம்ளரின் மையத்தில் அனைவரும் தத்தம் கட்டை விரலை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டும். டம்ளரின் மையம் சூடாக இருக்கலாம். 

அனைவரும் சேர்ந்து “ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! வந்து எங்கள் எதிர்காலத்தை எங்களுக்கு சொல்லுங்கள்! ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக!” என அழைக்க வேண்டும். பிறகு கட்டை விரலை எடுத்து விட்டு உங்கள் கேள்விகளை கேட்டால் ஆவி டம்ளரை நகர்த்தி பதில் சொல்லும். 

உதராணமாக எப்போது திருமணம் நடக்கும் என கேட்டால் அந்த வருடத்தை டம்ளரை குறிப்பிட்ட எண்களுக்கு நகர்த்தி பதில் சொல்லும். அதேபோல் பெயர், இடம் போன்றவைகளை சொல்ல எழுத்துக்களையும், ஆமாம்,இல்லை என சொல்ல yes, noவையும் காண்பிக்கும். ஆவி உங்கள் கண்களுக்கு தெரியாது. அது குரலும் கேட்காது. ஆனால் டம்ளர் தானாக நகர்வது தெரியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.