11/02/2021

யோகா ஆசனங்கள்...

 


யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் ஒப்பற்ற கலை ஆகும். இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும்.

யோகா நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் தருகிறது. எவ்வாறென்றால் உடலின் மூட்டுக்கள், முக்கியமாக முதுகுத் தண்டு. இவற்றை யோகா ஆரோக்கியமாக வைக்கிறது. யோகாசனங்கள் உடலின் முக்கிய பாகமான, சுமை தாங்கியான முதுகு தண்டை சீராக்கி, பயிற்சி தருகின்றன. இதனால் முதுகுத் தண்டு காக்கும் நரம்புகளும் வலிமை பெறுகின்றன.

பெரும்பாலான ஆசனங்கள் முதுகுத்தண்டை முன்னும், பின்னும், பக்கவாட்டில் வளைத்தும் பயிற்சி தருகின்றன.

அடுத்த முக்கியமான உடல் அவயம் நாளமில்லா சுரப்பிகள். இவைகள் தான் உடலில் சுரக்கும் ஹார்மோன்களை "கன்ட்ரோல்" செய்கின்றன தசைப்பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. தசைகள் வலிமை பெற்று விளங்கும்.

உடலின் ஒவ்வொரு நிலையையும் சுத்திகரித்து போஷாக்கு அளிக்கும்.

வீரியம், வலிமை, ஒருமுனைப்படுவதில் அபிவிருத்தி ஏற்படும்.

உடல் எடையை குறைக்கும். தினசரி, உடலுழைப்பு, வேலைகளால் ஏற்படும் களைப்பை யோகாசனங்கள் போக்கும்.

யோகாவின் சிறப்பு...

அது ஒரே பயிற்சியாக உடல், உள்ளம், ஆத்மா மற்றும் சுவாசம் ஆகியவற்றை இணைத்து பயிற்சி தருகிறது.

யோகா இயற்கையோடு இணைந்தது. தாவரங்கள், விலங்குகளைப் போல பல யோகாசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உதராணம்-விருக்ஸாஸனம், புஜங்காசனம், மயூராசனம் முதலியன மத்திய நரம்பு மண்டலத்தை நேரடியாக யோகா ஊக்குவிக்கிறது.

உதராணமாக ஆஸ்த்துமாவிற்காக செய்யப்படும் ஆசனங்கள் "சிம்பதெடிக்" மற்றும் "பாராசிம்பதெடிக்" எனும் நரம்புகளை "நார்மல்" நிலைக்கு கொண்டு வருகின்றன. இதனால் நுரையீரல் சுவாச நாளங்கள் நன்கு திறக்கின்றன. மூச்சு வருவது சுலபமாகிறது.

யோகாப்யாசங்கள் (தியானம், பிராணாயாமா) நேரடியாக மனதின் டென்சனை போக்குகின்றன. மனதை, உடலை, ரிலாக்ஸ்.. செய்வதற்கென்றே, பிரத்யேக யோகாசனங்கள்-சவாசனம், சுகாசனம், யோக நித்ரா போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன.

மனச்சுமையை இறக்கி வைக்க யோகாசனங்கள் உதவுகின்றன.

முன்பு சொன்னபடி, இரத்த ஒட்டத்தின் வேகத்தை யோகா அதிகரிக்கிறது. மூளை, இதயம் போன்ற உடலுப்புகள் நல்ல ரத்தத்தால் நிரப்பப்படுகின்றன. இதனால் மனம் மகிழ்ச்சியுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும். தன்னம்பிக்கை பெருகும்.

ஆயுர்வேதத்தின் படி உடலை விட்டு வெளியேறாத கழிவுப் பொருட்களால் நோய்கள் உருவாகின்றன. சத்கிரியை, பிராணாயம் கூடிய யோக தியானம், ஆசனங்கள் இவற்றால் கழிவுப்பொருட்கள் சரியாக, சீராக வெளியேறும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.